செயற்கை நுண்ணறிவு துறையில் புரட்சிகளை ஏற்படுத்தி வரும் OpenAI நிறுவனம், உலக இணையத் தேடலின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய புதிய முயற்சியை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக கூகுள் குரோம், மொசில்லா ஃபையர்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற பிரபலமான உலாவிகள் ஆட்சிப் பதவி வகித்து வந்த நிலையில், OpenAI சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘அட்லஸ்’ ( ChatGPT Atlas) எனும் புதிய AI-அடிப்படையிலான வலை உலாவி, தொழில்நுட்ப உலகை அதிரவைத்துள்ளது.

அட்லஸ் ஒரு சாதாரண பிரௌசர் அல்ல. இது முழுமையாக ChatGPT-யை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதலால் இயங்கும் ஒரு முழுமையான இணைய தளம். பயனர்களின் இணைய செயல்பாடுகளை சீரமைத்து, தேடல்களை எளிமைப்படுத்தி, ஆன்லைன் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதிகளை தானியங்கி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
OpenAI-யின் தரவு ஒருங்கிணைப்பு
OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் சமீபத்திய பேசிய உரையாடலில், ChatGPT வாராந்திர பயனர்கள் 800 மில்லியனைக் கடந்துவிட்டதாக அறிவித்தார். இந்த மிகப்பெரிய பயனர் அடிப்படை, நிறுவனத்தை அடுத்த நிலை தளங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
அட்லஸ் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்கள்:
- OpenAI தொழில்நுட்பத்தை தினசரி இணைய வாழ்க்கையில் ஆழமாக இணைக்க
- செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேலும் விரிவாக்கும்
- ChatGPT தரவு-புரிதல் திறன்களை இணையத் தேடலுடனும் இணைக்கும்
இதன் மூலம் OpenAI, பாரம்பரிய தேடல் முறையிலிருந்து “உரையாடல் அடிப்படையிலான இணைய அனுபவம்” என்ற புதிய நிலைக்கு பயனர்களை அழைத்து செல்கிறது.
அட்ரஸ் பார் இல்லை – ChatGPT மையமாகும் புதிய அனுபவம்
அட்லஸில் பாரம்பரிய Address Bar இல்லை. அதற்கு பதிலாக, தேடுதலின் ஒவ்வொரு பகுதிக்கும் ChatGPT உட்பொருத்தப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, இணைய தேடுதலின் முறையை முழுமையாக மாற்றுகிறது.
- இதன் சிறப்பம்சங்கள் :
- எந்தப் பக்கத்திலும் ChatGPT Sidebar திறந்து உள்ளடக்கத்தை உடனடியாக சுருக்கலாம்
- பொருட்களைக் COMPARE செய்யலாம்
- நிதி தரவு, விலை பட்டியல், புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்யலாம்
- இணையத்தின் எந்த இடத்திலிருந்தும் AI உதவியை பெறலாம்
- இந்த வடிவமைப்பு, “வலைப்பக்கத்திற்குள் AI-ஐ கொண்டுவருதல்” என்ற புதிய பார்வையை உருவாக்குகிறது.
Agent Mode–ல் செயல்படும் AI
அட்லஸின் மிகவும் புரட்சிகர அம்சமாக Agent Mode கூறப்படுகிறது. இது ஒரு கட்டண அம்சம். இதில் ChatGPT: - இணையத்தில் தானாகத் தேடும்
- வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்கிறது
- படிவங்களை நிரப்புகிறது
- பொருட்களை ஆர்டர் செய்கிறது
- பயண திட்டங்களை அமைக்கிறது
ஒரு நிகழ்வில் காட்டப்பட்ட உதாரணம்
OpenAI டெவலப்பர்கள் ஒரு நேரடி நிகழ்வில்:
ChatGPT-க்கு ஒரு குறிப்பிட்ட சமையல் ரெசிபியைத் தேடச் சொன்னார்கள்
அதன் அடிப்படையில் Instamart-இல் மளிகை பொருட்களை AI தானாகத் தேர்வு செய்து Order Page வரை கொண்டு சென்றது. இது AI-இன் “செயல்பாட்டு திறன்” (action capability) எவ்வளவு விரிவடைந்துள்ளது என்பதற்கான சிறந்த சான்று என கூறலாம்.
மற்ற சேவைகளுடன் ஒருங்கிணைப்பு
- அட்லஸ் தற்போது பல பிரபல தளங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது:
- Etsy, Shopify – ஆன்லைன் ஷாப்பிங்
- Expedia, Booking.com – பயண முன்பதிவுகள்
- Instacart – மளிகை பொருட்கள் வாங்குதல்
இதனால், பயனர்கள் இணைப்புகள் திறந்து ஒவ்வொன்றாக தேட வேண்டியதில்லை; AI அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே பதிலில் வழங்குகிறது.
AI பிரவுசர்களின் வசதி & சிக்கல்கள் – நிபுணர்களின் கவலை
லண்டன் கிங்ஸ் கல்லூரி AI நிறுவனம் தலைவர் பேராசிரியர் எலெனா சிம்பர்ல் அட்லஸின் வசதிகளை பாராட்டியபோதும், சில முக்கிய எச்சரிக்கைகளை முன்வைத்தார்:
- AI-ஆல் இயக்கப்படும் பிரௌசர்கள் மிக வசதியானவை
- பல இணைய இணைப்புகளைத் திறந்து ஒப்பிட வேண்டிய சிரமம் இல்லை தகவல் சுருக்கம் மிக எளிதாகிறது
- ஆனால்… AI நம்பகமான மூலத்தை நம்பத்தகாத மூலத்திடமிருந்து வேறுபடுத்தத் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது
- தவறான தகவல்கள் சேர்க்கும் வாய்ப்புள்ளது.
- பயனர்கள் பகிரும் தனிப்பட்ட தரவை திறம்பட பாதுகாக்கும் உறுதி தேவை வேண்டும் மற்றும்
- பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

OpenAI பாதுகாப்பு அம்சங்கள்
- OpenAI பல பாதுகாப்பு மரபுகளை அட்லஸில் கையாள்கிறது:
- தேடுதல் குறியீடுகளை அதுவே இயக்க முடியாது
- கோப்புகளை தானாக பதிவிறக்காது
- வெளிப்புற செயலிகளை அணுகாது
- வங்கி போன்ற முக்கிய வலைத்தளங்களில் Agent Mode தானாக முடக்கப்படும்
- மேலும், பயனர்கள் Agent Mode-ஐ Logged-out Mode-இல் இயக்கலாம், இது பாதுகாப்பை அதிகரிக்கும்.
Browsing Memory
- அட்லஸின் மற்றொரு முக்கிய அம்சம் Browsing Memory.
- நீங்கள் இதற்கு முன் தேடியதை நினைவில் வைத்துக்கொள்கிறது. புதிய தேடல்களில் அதனை அடிப்படையாக எடுத்து புத்திசாலித்தனமான பரிந்துரைகள் வழங்குகிறது
- விரும்பினால் நினைவகத்தை முழுமையாக அணைக்கலாம்
- openAI இதை முழுக்க பயனர் தேர்வின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என உறுதி செய்கிறது.
ஏன் அட்லஸ் கூகுளுக்கு ஒரு நேரடி சவால்?
உரையாடல் அடிப்படையிலான AI தேடல் பயனர்களிடையே அதிகரித்து வருகிறது
இணையத்தில் பதில் தேடுவதற்குப் பதிலாக “ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்ட பதில்” பெற மக்கள் விரும்புகிறார்கள்
பாரம்பரிய Google Search முறைமையை AI-ஆல் மாற்றும் சாத்தியம் அதிகரித்துள்ளது
2025 ஜூலை ஆய்வின்படி: 5.99% டெஸ்க்டாப் தேடல்கள் LLMs-க்கு (AI Models) சென்றுள்ளன.
இது கடந்த ஆண்டைவிட இருமடங்கு, அட்லஸ் இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தும்.
கூகுள் ஜெமினி மூலம் AI தேடலை துரிதப்படுத்தி வரும் நிலையில், AI பிரவுசர் போராட்டம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
ஆனால் கூடவே, தனிநபர் தரவு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் முக்கிய கேள்விகளாகவே
உள்ளன.
