எப்படியும் அதிமுகவில் இணைந்துவிடலாம் என்று நினைத்திருந்த ஓபிஎஸ்சின் எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அதனால் அடுத்து என்ன செய்வது? என்ற அவரது ஆதரவாளர்களின் கேள்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது பயணிக்கலாம் என்று சொல்லி வந்தார் ஓபிஎஸ். இப்போது அதிலும் பங்கம் வந்துவிட்டது.
அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவதாக சம்மதித்திருக்கும் பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கு 3 சீட் மட்டுமே ஒதுக்குவதாக முடிவெடுத்திருக்கிறார். இந்த தகவலைக் கேட்டு சீற்றம் அடைந்திருக்கிறது ஓபிஎஸ் அணி.

இந்த நிலையில்தான் அடுத்து என்ன செய்வது? என்று நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார் ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? என்று கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறார் ஓபிஎஸ். இதற்கு ஒரு படிவம் ஒன்றை நிர்வாகிகளிடம் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். அந்த படிவத்தில் திமுக, தவெக கட்சிகள் இருந்துள்ளன. இதில் 90 சதவிகிதம் பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் 80 பேரில் 72 பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் செல்வதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் பல நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
தனது அணியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேரின் விருப்பத்தினை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ். அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதாகவும் கூறி இருக்கிறார்.
தவெகவில் கூட்டணி அமைக்க 38 சீட் வேண்டும் என்கிற நிபந்தனையை முன் வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவுடன் இனி ஒருங்கிணைப்பு கிடையாது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி போகப்போவதில்லை என்ற முடிவெத்த பின்னர்தான் பழனிசாமி பெயரைச் சொல்வதறே வெட்கமாக இருக்குது என்றார். ’’எடப்பாடி இருக்கும் வரை நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை’’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் கர்ஜித்துள்ளார்.
