தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரிப்பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் தந்தை சுமைதூக்கும் தொழிலாளி. தாய் வெளிநாட்டில் வேலை.
கடந்த மாதம் 12ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று மாலையில் வீட்டிற்கு தனியாக சென்றவரை மிரட்டி அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு அரசு மருத்துவ உதவியும், இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், வழக்கில் அலட்சியமாக இருந்த போலீசும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் கேள்வி கூட எழுப்பப்படவில்லை என்றும் வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் பரவுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் வதந்தி என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணுடன் நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது மாவட்டம் நிர்வாகம் என்று அரசு தரப்பும் விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 2 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அன்றே கைது செய்யப்பட்டுவிட்டனர். இந்த வழக்கில் பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் கடந்தமாதம் 18ம் தேதி அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். அதுமட்டுமல்லாமல் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் தலைமைக்காவலர் மீது ம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியிடம் இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வ விளக்கமும் பெறப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்க, ஒரத்தநாடு பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வதந்தியை பரப்பாதீர் என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது அரசு.