
காஷ்மீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக, ஏப்ரல் 19ம் தேதி ஸ்ரீநகர் மற்றும் டச்சிகம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் தகவல் கிடைத்ததாக அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல், 19ம் தேதி காஷ்மீரில் கத்ரா-சங்கல்தான் என்ற இரயில் இணைப்பைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார். பிறகு மோசமான வானிலையைக் காரணம் காட்டி மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஏப்ரல், 22ம் தேதி பஹல்காமில் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தாக்குதல் தொடர்பாகப் பல தகவல்கள் கிடைக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு 4, 5 நாட்களுக்கு முன்பாக மூத்த காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்ததாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும், போதுமான இராணுவ வீரர்கள் வருவதற்காகக் காத்திருந்ததால், சம்பவ இடத்திற்குச் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கற்ற எம்.பி.க்களிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுற்றுலாப் பயணிகளை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்காரர்கள் காவல்துறைக்கு தெரிவிக்காமல் பைசரன் பகுதிக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பைசரன் பகுதியில் பாதுகாப்பு இல்லை என்றும், அமர்நாத் யாத்திரை தொடங்கும் முன் அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு, ஜூன் 15 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்காக பைசரன் பகுதி திறக்கப்பட இருந்ததாகவும், ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கும் என்றும் எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர், பைசரன் பகுதி அமர்நாத் யாத்திரை காலத்தை தவிர ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
பைசரன் புல்வெளி சுற்றுலா தளத்தை பராமரிப்பதற்கான டெண்டர் ஆகஸ்ட் 2024ல் பிஜ்பெஹாரா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.3 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் அதில் இந்தப் பகுதி பாதுகாப்பு கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதி என்பதற்கான எந்த அரசாங்க உத்தரவும் இல்லை பைசரன் எப்போதும் திறந்தே இருக்கும். இ