பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தற்போது, சுமார் 3.4 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புக்களுடன் வெனிசுலா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஈரான், கனடா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன.
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றக்கூடிய திறனைக் கொண்டுள்ள இந்த கண்டுபிடிப்பு, நட்பு தேசத்துடன் இணைந்து மூன்று ஆண்டு கால ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி Dawn News TV செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read: ‘Project 2025’ என்றால் என்ன? டிரம்பின் ‘வஞ்சக திட்டம்’ என கமலா ஹாரிஸ் கூறியது ஏன்?
விரிவான புவியியல் கணக்கெடுப்பு மூலம் வளங்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமின்றி அந்த கடற்பகுதியில் பல மதிப்புமிக்க கனிம வளங்களும் இருப்பதாகவும், தனது சொந்த ‘நீல நீர் பொருளாதாரம்’ மூலம் பாகிஸ்தான் பயனடைவதற்கான ஒரு முயற்சியாக இந்த கண்டுபிடுப்பு அமைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு மற்றும் ஏலத்திற்கான பேச்சுவார்த்தைகள் மதிப்பாய்வில் உள்ளன, ஆனால் கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது ஒரு நீண்ட கால முயற்சியாக இருக்கலாம். மேலும் இந்த திட்டங்களை செயல்படுத்த அதிகளவிலான முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படும் என்பது கவனத்திற்குறியது.
சவால்கள்
பாகிஸ்தானின் முன்னாள் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் (OGRA) உறுப்பினர் முஹம்மது ஆரிஃப் மிகவும் எச்சரிக்கையான கருத்தை கூறியிருக்கிறார். இந்த கண்டுபிடுப்பு நாட்டிற்கு நம்பிக்கையை தருவதாக இருந்தாலும், வளங்களின் இருப்புக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமலும் போகலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேற்படியான ஆய்வுக்கு சுமார் $5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் தேவைப்படலாம் என்றும், எண்ணெய் வளங்களை பிரித்தெடுப்பதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் முஹம்மது ஆரிஃப் கூறுகிறார்.
Also Read: Trump Vs Kamala – அதிபர் வேட்பாளர்கள் இடையே நடந்த காரசார விவாதம்…!
இருப்பினும், வளங்களின் இருப்புக்கள் சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆய்வு தொடங்கும் வரை, தற்போதைய எதிர்பார்ப்புகள் பெருமளவில் ஊகமாகவே இருக்கும் என்று ஆரிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
கடந்த பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி, 2022 பேரழிவுகாரமான வெள்ளம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் பாகிஸ்தானின் பொருளாதாரம் போராடி வருவதாக தெரிவிக்கிறது.
Also Read: தலையங்கம் – ‘மது’வாத அரசியல்
2023-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடன் சுமார் 126 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அதிக பணவீக்கம், குறைந்து வரும் அந்நிய கையிருப்பு மற்றும் பல நிதி அழுத்தங்களால் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களின் கண்டுபிடிப்பு, முழுமையாக எடுக்கப்பட்டால், ஒரு திருப்புமுனையாக இருக்கலாம், விலையுயர்ந்த எரிசக்தி இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதன் மூலம் பாகிஸ்தான் தனது பொருளாதார துயரங்களைத் தணிக்க உதவலாம்.