போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அவலம் நேர்ந்திருக்கிறது. அந்த தடுப்பு மருந்து அதிக விலை. அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வதில் சிக்கல் இருந்ததாக மருத்துவர்கள் சொல்வது குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்கும் நோய் ’டிப்தீரியா’(Corynebacterium diphtheriae bacterium). தமிழில் இதை தொண்டை அடைப்பான் என்பர். இந்தக்கிருமிகள் பதித்தால் தொண்டையை பாதிக்கும். சுவாதிப்பதையும், உணவு விழுங்குவதையும் இது தடுக்கும். இதனால் இதயம், நரம்புகள் சேதமடையும். வேகமாகப்பரவுக்கூடிய நோய் இந்த தொண்டை அடைப்பான் நோய் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த நோயை குணப்படுத்த ‘டாட்’ எனும் எதிர்ப்பு மருந்து தேவை. இந்த மருந்து போதிய அளவில் இல்லாததால் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இந்த டாட் தடுப்பூசி 1200 டாலர் என்கிறார்கள். ஒருவேளை விலை அதிகம் என்பதால்தான் போதிய அளவில் ஏற்பாடு செய்ய முடியாத நிலை இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரம், இது உண்மை என்றால் மக்களை காக்க முடியாத ஆட்சியாளர்களுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் 140 பேருக்கு தொண்டை அடைப்பான் நோய் பாதித்ததில் 52 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூட பாகிஸ்தானில் அதிகாரிகள் அலட்சியாக இருந்து வருகின்றனர் என்று கவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.