தவெக தலைவர் ஆகிவிட்டதால் விஜய் நடிக்கும் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ வருகிறது. இந்தப்படத்தில் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என்றே படக்குழுவில் இருந்து தகவல் கசிந்து வருகிறது.
பொங்கலுக்கு திரைக்கும் வரும் இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே போதிய வரவேற்பினை பெறாத நிலையில், இரண்டாம் பாடல் நாளை மறுதினம் வெளியாகிறது. ஈரோட்டில் நாளை மறுதினம் 18ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் விஜய். அந்த நாளில் ஜனநாயகன் இரண்டாவதுசிங்கிள் வெளியாகிறது.

முதல் பாடலை போல அல்லாமல் இப்பாடல் தெறி சம்பவம் கொடுக்கும் என்கிறது பட நிறுவனம். அதனால்தான், ’’நேற்று வரை அமைதி…18-ஆம் தேதியிலிருந்து புயல்’’என்று சொல்லி பில்டப் ஏற்றுகிறது.
நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதை குறிக்கிறது இந்த வரிகள். இதே வரிகள் பாடலில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
