
அரசை விமர்சிப்பவர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்த கேள்வியை கேட்டவுடன், பிரதமர் மோடி சத்தமாக சிரித்தார்: Financial Times (FT)
கடந்த புதன்கிழமை வெளியான FT நிறுவனத்தின் நேர்காணலில், பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்
முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கு, “இந்திய சமூகம் எந்தவொரு மதச் சிறுபான்மையினரிடமும் பாரபட்ச உணர்வு காட்டுவது இல்லை”, என கூறியுள்ளார்
2014 ஆண்டு முதல் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள், வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாகக் கூறும் விமர்சனத்தை நிராகரித்த மோடி, “இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது”, என்று சுட்டிக்காட்டியுள்ளார்
“முஸ்லிம்” என்கிற வார்த்தையை நேர்காணல் முழுவதும் தவிர்த்த அவர், உலகின் பிற நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பார்சி சமூகத்தினர் இந்தியாவில் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ்வதாக தெரிவித்தார்
அரசை விமர்சிப்பவர்கள் மீதான அடக்குமுறை குறித்த கேள்விக்கு, சத்தமாக சிரித்த மோடி, “அரசை விமர்சிக்க உரிமை இருப்பதாகவும், அதேநேரம் அவர்களுக்கு உண்மைகளுடன் கூடிய பதிலை அளிக்க மற்றவர்களுக்கும் சம உரிமை உண்டு”, என கூறியுள்ளார்
இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மரபுகள் சிதைந்து வருவதாக கூறும் விமர்சனத்தையும், பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்
மேலும் இது போன்ற விமர்சனங்கள் இந்திய மக்களின் அறிவுத்திறனை அவமதிப்பது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்கான அவர்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளது, என பிரதமர் மோடி பதில் கூறியுள்ளார்
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?