
File Pic
வன்னியர்களுக்கு 10.5% சதவீத உள் ஒதுக்கீடு கோரி பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்கள் கேட்கும் ஒதுக்கீட்டை விடவும் தற்போது உள்ள 20% சதவீத MBC ஒதுக்கீட்டில் அதிகளவு வன்னிய சமூக மக்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்விச் சேர்க்கையில் பயன்பெற்று வருவது RTI மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம் சார் ஆய்வாளர் பணியிடங்களில் 17% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் உதவி மருத்துவர் பணியிடங்களில் 10.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
வனச் சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலமாக 11.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:

TNPSC குரூப்-1 பணியிடங்களில் 11.6% சதவீதமும்,
TNPSC குரூப்-2 மற்றும் 2A பணியிடங்களில் 11.2% சதவீதமும்,
TNPSCகுரூப்-3 பணியிடங்களில் 11.4% சதவீதமும்,
TNPSCகுரூப்-4 பணியிடங்களில் 19.5% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் 10.2% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
TNPSC சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் 9.9% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 10.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுப் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்
கடந்த 5 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:
MBBS மாணவர் சேர்கையில் 11.4% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்,
மருத்துவத்துறை மேற்படிப்புகளில் 10.2% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும்,
BDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.4% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்
MDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.6% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்
கால்நடை அறிவியல் படிப்பில் 13% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்,
ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 7.6% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில், மொத்தமுள்ள 20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:
அரசு சட்டக் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 8.3% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்,
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்கையில் 10.3% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்.