
சத்யமூர்த்தி பவன் வழியாக கோபாலாபுரம் செல்வது என்று முடிவெடுத்திருக்கிறது தைலாபுரம். அன்புமணி அல்லாத பாமக என்பதால் விசிகவும் பச்சைக்கொடி காட்டுகிறது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணையவே ராமதாசுக்கு விருப்பம். ஆனால், தன் மேல் இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், மீண்டும் மத்திய அமைச்சர் கனவை நிறைவேற்றவும் என்.டி.ஏ. கூட்டணியில் இணையவே அன்புமணிக்கு விருப்பம். இதில்தான் ஆரம்பித்தது தந்தை – மகன் மோதல்.
- வன்னியர் சங்க மாநாட்டில் பாஜகவை குஷிப்படுத்த , இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார் அன்புமணி. ஆனால் ராமதாஸ், ’’தம்பி ஸ்டாலின் உங்களை விட்டா வேறு யார்? என்று வாதாடினேன்’’ என்று திமுக பாசத்தைக் காட்டினார்.
- தம்பி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க என்று கலைஞரிடம் நான் தான் சொன்னேன். கூட்டணி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, ஏன் இவ்வளவு பாரம் வைத்திருக்கிறீர்கள். துணை முதலமைச்சர் பதவியை தம்பி ஸ்டாலினிடம் கொடுங்கள் என்று சொன்னேன். நான் தான் பதவி வழங்கச்சொன்னேன் என்று பலமுறை ஸ்டாலினிடமும் சொல்லி இருக்கிறேன். அதற்கு தம்பி ஸ்டாலினும், ஆமாம் அய்யா நீங்கள்தான் சொன்னீர்கள் என்று சொல்லுவார் என்று கடந்த ஜனவரி மாதம் தைலாபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கலைஞர் – ஸ்டாலின் பாசத்தை வெளிப்படுத்தினார் ராமதாஸ்.

- கூட்டணியில் இருந்துகொண்டே ராமதாஸ் தினமும் விமர்சிக்கிறாரே? என்று கேட்டபோது, ‘தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது’ என்று விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார் என கலைஞரின் பெருந்தன்மை குறித்து அண்மைக்காலமாக பேசி வருகிறார் ராமதாஸ்.
- நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைஞரை, அதிமுக கூட்டணியில் இருந்த நான் பார்க்கச் சென்றபோது, ’உங்களால்தான் இது எல்லாம் நடந்தது’ என்று சொன்னார். அவருடன் நான் கூட்டணி வைத்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்காது என்ற அர்த்தத்தில் சொன்னார் என கலைஞர் மீதான பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார் ராமதாஸ்.

- பாமகவில் தலைவர் பதவிக்கு அன்புமணி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ’’கலைஞர் பாணியில் நானே இறுதி மூச்சு வரையிலும் தலைவராக இருப்பேன். ஸடாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக இருந்துவிட்டு போகட்டும் என்று நேற்று சொன்னார் ராமதாஸ்.
- அதோடு, கலைஞர் தலைவராக இருந்த வரையிலும் தம்பி ஸ்டாலினிடம் இருந்து எந்த முணுமுணுப்பும் வரவில்லை என்று ஸ்டாலினை பாராட்டியும், அன்புமணியை விளாசியும் எடுத்திருந்தார் ராமதாஸ்.
- பாமக பிரச்சனைக்கு காரணம் திமுகதான் என்று அன்புமணி குற்றம் சுமத்தியபோது, பாமக பிரச்சனைக்கும் திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணி சொல்வது வடிகட்டிய பொய் என்று மீண்டும் திமுக மீதான தனது பாசத்தைக் காட்டினார் ராமதாஸ்.

- இதனால் திமுக கூட்டணியில் பாமக வரப்போகிறது என்ற பேச்சு இருந்த நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்து பேசியுள்ளார்.
- ’’இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. மரியாதை நிமித்தமான சந்திப்பு. நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்த கட்சி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி சென்று தங்கி இருந்துவிட்டு இன்று காலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பினேன். அப்போது வரும் வழியில் தைலாபுரம் வந்தபோது, ராமதாசின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாசை சந்தித்தேன்’’என்று செல்வப்பெருந்தகை சொன்னாலும், உள்ளுக்குள் என்னமோ திட்டமிருக்கு என்றே விமர்சனங்கள் எழுகின்றன.
- ’’பாமகவில் ஏற்படும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி சொல்கிறார் என்றால் அவர் புரிதல் இல்லாமல் அப்படிச் சொல்கிறார். பாஜகவை சமாதானம் செய்வதற்காக அன்புமணி அப்படிச் சொல்கிறாரே தவிர, அவருடைய உள்மனது அதை நினைக்காது. பாமகவில் பிரச்சனை செய்வதற்கு திமுகவுக்கு என்ன தேவை இருக்கிறது. முதல்வருக்கும் இது மாதிரியான அரசியல் எல்லாம் தெரியாது’’என்று திமுக – பாமக சுமூக உறவை எடுத்துச் சொல்லி இருக்கிறார் செல்வப்பெருந்தகை.

- திமுக கூட்டணிக்கு பாமக வருகிறதா? என்று கேட்டால், இல்லை என்று சொல்லாமல், ’’தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அந்த முடிவை ராமதாஸ் எடுப்பார். திமுக கூட்டணியில் பாமக இணைவது குறித்து திமுக தலைவர்தான் முடிவு செய்வார்’’என்கிறார் செல்வப்பெருந்தகை.
- தைலாபுரத்திற்கு செல்வப்பெருந்தகை செல்கிறார் என்றால் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டு தலைவருக்கு ஸ்டாலின் அனுமதி இல்லாமல் செல்ல மாட்டார். அப்படி சென்றிருக்கிறார் என்றால் ஸ்டாலின் கிரீன் சிக்னல் காட்டி இருக்க வேண்டும். அதனால்தான் செல்வப்பெருந்தகை தைலாபுரம் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
- திமுக கூட்டணிக்கு பாமக வருகிறது என்றால் விசிகவின் முடிவு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமா சொன்னார் என்று சொன்னால் அது அன்புமணியின் மீதுள்ள அதிருப்தியின் காரணம்தான். இப்போது அன்புமணி அல்லாத ராமதாஸ் தலைமையிலான பாமக திமுகவுக்கு வருவதை திருமா ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள்.
- இதன் அடையாளமாகத்தான் ராமதாசை திருமாவும், பதிலுக்கு திருமாவை ராமதாசும் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார்கள் என்ற பேச்சும் இருக்கிறது.
- ஆக, அன்புமணி அல்லாத பாமக, திமுக கூட்டணிக்கு வருகிறது. அதேநேரம் இந்த திடீர் விருந்தாளியால் ஏற்கனவே உள்ளவர்களுக்கு எந்த மனக்கசப்பும் ஏற்படப்போவதில்லை என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.
tzvlkpwlmxtpiwpquymuqsfltrslgh
Yenimahalle Elektrikçi Hanife Ç. – “Çocuk parkı elektrik tesisatını kurdu. Güvenlik öncelikli yaklaşım.” https://dockersmobilya.com.tr/index.php?journal_blog_post_id=4&route=journal3%2Fblog%2Fpost