கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்து, கர்ப்பமானதும் கருவை கலைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற பூசாரி கார்த்தியின் செல்போனில் இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் உள்ளன. அவர்களையும் விஐபிகளுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்று நடிகை அளித்துள்ள வாக்குமூலம் அதிரவைக்கின்றன.
சென்னை பாரிமுனையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் காளிகாம்பாள் கோயில். இங்கு பூசாரியாக இருந்த கார்த்திக் மீது நடிகை அளித்த பாலியல் புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது கார்த்தி அறிமுகமானார். ஒருநாள் என்னை அவரது சொகுசு காரில் வீட்டில் வந்து இறக்கிவிட்டார். மரியாதை நிமித்தமாக வீட்டிற்குள் அவர் வந்ததும் கோயில் தீர்த்தம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கிவிட்டேன். பின்னர் கண்விழித்து பார்த்ததும் நிர்வாண கோலத்தில் கிடந்தேன். அதுகுறித்து போன் செய்து சத்தம் போட்டதும் கார்த்தி நேரில் வந்து மன்னிப்பு கேட்டு அப்போது எனக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். ஆனால், நான் கர்ப்பம் அடைந்ததும் வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்துவிட்டார்.
அதன் பின்னர் என்னை தனது விஜபி நண்பரிடம் நெருக்கமாக இருக்கச்சொல்லி வற்புறுத்தினார். கார்த்தியின் தோழி சுவேதான் என்னை பாலியல் தொழில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்தினார். இதனால் ஏற்பட்ட தகராறில் கார்த்தி மனைவி பிரியாவிடம் சொன்னபோது, அதை கண்டுகொள்ளாத அவர், இதைப்பற்றி யாரிடமும் புகார் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினார் என்று பாதிக்கப்பட்ட 30 வயதுடைய அந்த இளம் நடிகை சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13 ம் தேதி புகார் அளித்தார்.
அந்த புகாரில் மேலும், பூசாரியின் செல்போனில் இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் உள்ளன. குடும்ப பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. என் போட்டோவை வேறு ஒரு நபருக்கு அனுப்பி இருந்தார். அதே போன்று அந்த பெண்களையும் விஐபிகளுக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பார் என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை என்பது தெரியவந்துள்ளது. இதற்குள் பூசாரி கார்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புகாரை அடுத்து காளிகாம்பாள் கோயில் நிர்வாகம் கார்த்திக்கை சஸ்பெண்ட் செய்துள்ளது. கார்த்திக் சிக்கினால் தொழிலதிபர்கள் பலர் சிக்குவார்கள் என்பதால் அவர்கள் போலீசாருக்கு போன் செய்து கார்த்திக்கை கைது செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்கிறது காவல்துறை வட்டாரம். ஆனாலும் போலீசார் கார்த்திக்கை பிடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.