நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தன்னைத் தேர்தலில் களமிறக்க மூன்று அரசியல் கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
- நாடாளுமன்றத் தேர்தலில் என்னைக் களமிறக்க 3 அரசியல் கட்சிகள் என் பின்னால் உள்ளன
- நான் எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன்; நான் அவர்களது வலையில் சிக்க விரும்பவில்லை
- அவர்கள் மக்களுக்காகவும் எனது சித்தாந்தத்திற்காகவும் வரவில்லை
- கடுமையான மோடி விமர்சகர் என்பதால் நீங்கள் ஒரு நல்ல வேட்பாளர் என்று கூறி அணுகுகிறார்கள்
என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Actor Prakash Raj in Kerala Literature Festival, 2024
கடந்த 2017-ம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் #Justasking என்ற ஹேஷ்டேக்குடன் தனது தீவிர அரசியல் பிரவேசத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கினார்.
2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், சுமார் 28,906 வாக்குகள் (2.41%) பெற்று தோல்வியை தழுவினார்.