
அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் ராமதாஸ். ஆனால், அன்புமணியோ, ’பாமக தலைவர்’ என்கிற பெயரில் 37ஆம் ஆண்டில் பா.ம.க: வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் – உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அந்த அறிக்கையில் ’அன்புமணி ராமதாஸ்’ என்று இடம்பெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் என்று கையெழுத்தும் போட்டுள்ளார்.

என் பெயரை இனிமேல் அன்புமணி பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் இனிஷியலை மட்டும் போட்டுக்கொள்ளட்டும் என்று நேற்று ராமதாஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், அதாவது அன்புமணி ராமதாஸ் என்று பயன்படுத்தக்கூடாது. ரா.அன்புமணி என்று பயன்படுத்ததால் என்று சொல்லி இருண்ட்ர்ஹ நிலையில், இன்றைக்கு ‘அன்புமணி ராமதாஸ்’ என்றே கையெழுத்து போட்டிருக்கிறார் அன்புமணி.

இதற்கு ராமதாஸ் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறாரோ தெரியவில்லை.
தந்தை – மகன் மோதல் இப்படி உச்சத்தில் இருக்கும் நிலையில் ராமதாஸ் நேற்று கும்பகோணத்திற்கு சென்றிருந்த நேரத்தில் தைலாபுரம் தோட்டம் சென்று தனது தாயாரை சந்தித்து பேசியிருக்கிறார்.
தந்தை – மகன் மோதலில் தாயார் யார் பக்கம்? தைலாபுரத்தில் நேற்று நடந்தது என்ன? ராமதாசின் மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கியப் பதவியா? என்று தகித்துக் கிடக்கிறது தைலாபுரம் வட்டாரம்.