அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் சொல்லிக் கொண்டிருந்தபோதே ‘தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்’ என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ரஜினிகாந்த் தொடர்ந்து நடிக்கட்டும். முதல் காட்சியை முதல் ஆளாகப்பார்த்து கொண்டாடுவேன். ஆனால் ஆட்சியை பிடிக்க விடமாடோம் என்று பேசிவந்தார் சீமான். அவரைத்தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவும் பேசி வந்தார்.
ஒருவழியாக அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டு முழுமூச்சாக சினிமா பயணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் ரஜினி. அண்மையில் அவர் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சீமான் பாராட்டி இருந்தார்.
அதன்பின்னர் வேட்டையன் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ரஜினிக்கு கான்பரன்ஸ் கால் போட்டு கொடுத்துவிட, சீமானும் ரஜினியும் வெகு நேரம் மனம் விட்டுப் பேசி இருக்கிறார்கள்.
வேட்டையன் படம் போலவே நல்ல மெசேஜ் சொல்லும் படங்களில் தொடர்ந்து நடியுங்கள் என்று சீமான் சொல்லை, அது மாதிரியான கதைகளைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்.
வேட்டையன் படத்தில் வரும் ஒரு டயலாக் தனக்கு ரொம்ப பிடித்துவிட்டது என்று சீமான் சொன்னபோது, அது எந்த டயலாக் என்று தெரிந்துகொள்ள ரஜினி மிக ஆவலாக இருந்த நேரத்தில், ‘’எந்த பொண்டாட்டி புருசன் பேச்சை கேட்குறா? ’’ என்கிற அந்த டயலாக்தான் என்று சொல்லிவிட்டு சீமான் சிரிக்க, ரஜினியும் மனம் விட்டு சிரித்திருக்கிறார்.
தவெக மாநாட்டை நடத்தி விஜய் நடத்தி முடித்திருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பின்னர்தான் ரஜினி -சீமான் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அநேகமாக தவெக குறித்தும் விஜய் குறித்தும் இருவரும் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.