ரஜினிகாந்தை அரசியல் கட்சி தொடங்கச்சொல்லி பின்னணியில் இருந்து பாஜக இயக்கி வந்ததாக அப்போதெல்லாம் பரபரப்பு தகவல்கள் பரவி வந்தன.
ரஜினிகாந்தும் கட்சி தொடங்குவதாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தார். தமிழ்நாடு பாஜகவில் இருந்த முக்கிய நிர்வாகி ரஜினி பக்கம் சென்றார். ’போருக்குத் தயாராக இருங்கள்’ என்று ரஜினியும் தனது ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.
அரசியலில் தான் கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன். முதலமைச்சர் வேட்பாளர் வேறு ஒருவராகத்தான் இருப்பார் என்றெல்லாம் அறிவித்தார் ரஜினி.
மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வந்தார். ரசிகர்களும் தொண்டர்களாக மாறி பூத் கமிட்டிகளை அமைத்து வந்தனர்.
கடைசியில் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த ரஜினி, இனி அரசியல் வாடையே தனதுக்கு ஆகாது என்று அறிவித்துவிட்டார்.
இதனால் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா ரொம்பவே டென்ஷன் ஆனார் என்றும் அப்போது செய்திகள் பரவின.
இந்த அலைகள் எல்லாம் ஓய்ந்த பின்னர் இப்போது நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி முதல் மாநாடு நடத்தி இருக்கிறார். இதில் அவர் திமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், சபாநாயகர் அப்பாடு இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவர், ‘’ரஜினிகாந்த் வராததால் பாஜகதான் விஜய்யை இறக்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘’வருமான வரித்துறை சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு ஆதரவாக திமுகதான் குரல் கொடுத்தது’’ என்று தெரிவித்திருக்கும் அவர், ’’ மற்றவர்களை குறை சொல்லும் விஜய் உண்மையாக இருக்க வேண்டும்’’என்கிறார்.