பேசாமால் தமிழக பாஜகவை ஆடியோ, வீடியோ கட்சி என்று சொல்லிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவிற்கு தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகளின் ஆடியோ, வீடியோ வெளியாகி புயல் வீசிக்கொண்டே இருக்கிறது. விழுப்புரம் பாஜக தலைவர் கலிவரதனின் ஆடியோதான் லேட்டஸ்ட் என்று இருந்தது. இதையடுத்து ராமசீனிவாசன் பற்றிய ஆடியோதான் தற்போது பாஜகவில் வீசும் புதுப்புயல்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் தனக்கு கடவுள் மாதிரி என்று சொல்லிவந்த திருச்சி சூர்யா, தன்னை கட்சியில் இருந்து நீக்கியதும், சீற்றம் கொண்டு, ‘’இந்த தம்பியின் மறுபக்கத்தை அண்ணாமலை பார்ப்பார்’’ என்று எச்சரித்தார். அதற்கேற்றார் போல் பாஜகவை சீண்ட ஆரம்பித்துவிட்டார்.
பாஜக நிர்வாகி ராமசீனிவாசன் குறித்து மதுரை பாஜக தொண்டர்கள் பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல் என்று ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
’’ஒழுக்கமா இருக்கணும். தான் பாட்டுக்கு போகுற போக்குல எல்லாம் இப்படி பண்ணிக்கிட்டு திரிஞ்சா என்ன அர்த்தம் சொல்லுங்க?’’
‘’ஆமா.. கண்டிப்பா.. கண்டிப்பா..’’
‘’பிரச்சனையாகி பிழைச்சுக்கிட்டாப்புல..தெரியுமா?’’
‘’தெரியாதே!’’
“2016ல.. இல்ல 2019 தேர்தலுக்கு அடுத்துன்னு நினைக்கிறேன். அந்தாளு அப்பன் திருப்பதியைச் சேர்ந்த பெண் வீட்டுல தங்கி இருந்து பெரிய பிரச்சனையாகி மாசமாகி பேபியை அபார்ஷன் பண்ணி.. பெரிய பிரச்சனையாகிட்டு அதெல்லாம்…’’
‘’ம்..ம்…’’
‘’இப்படியா உள்ள ஆளுகங்களுக்குத்தான் கட்சியில கொடுக்குறாங்க பாருங்க..’’
”…..”
‘’இந்தாளுனாலதான் கட்சி தோட்க போகுது பாருங்க.. வரப்போற தேர்தல்ல முதல் தோல்வியே மதுரைதான். எழுதி வச்சிக்குங்க..’’
“ கண்டிப்பா..கண்டிப்பா..’’
’’வேட்பாளரா இருக்குறனுமுன்னு செல்வாக்கு வேணும். தான் பாட்டுக்கு போகுற போக்குல எல்லாம் இப்படி பண்ணிக்கிட்டு திரிஞ்சா என்ன சொல்லுங்க?’’
“ஆமா..ஆமா..’’
என்று நீள்கிறது அந்த ஆடியோவில்.
ராம சீனிவாசனின் காம களியாட்டம், மதுரையில் பாஜகவினர் இவரை காம சீனிவாசன் என்று அழைக்கிறார்களாமே? என்றும் அந்த ஆடியோவுடன் பதிவிட்டிருக்கும் சூர்யா, விரைவில் காம சீனிவாசன் பற்றி அடுத்தடுத்து வெளிவரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.