அப்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார் சரத்குமார். அந்த நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாசின் பயோபிக் சினிமாவில் ராமதாஸ் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.
நாடார் சமூகத்தைச் சேர்ந்த சரத்குமார், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராமதாஸ் பாத்திரத்தில் நடித்தால் தனது சமூக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள மாட்டாரா சரத்குமார்? சமத்துவ மக்கள் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விகள் எழுந்தன.
இயக்குநர் சேரன், சரத்குமாருடன் நெருங்கிய நட்பில் இருந்ததால் அப்படத்தை அவர் இயக்குவதால், சரத்குமாரை சம்மதிக்க வைத்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன.
இதன் பின்னர் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டதால் ராமதாஸ் பாத்திரத்தில் நடிக்க எந்த சிக்கலும் இல்லை என்று பேசப்பட்டது. பாமகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சரத்குமாரும் பாஜகவில் இருந்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, சரத்குமார் அப்படத்தில் இருந்து விலகினார்.
தொடர் தோல்விப்படங்கள், ரெய்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கலில் இருக்கும் லைகா தயாரிப்பு நிறுவனம் இந்தியன் -2 பட வெளியீட்டின் மூலம் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ராமதாசின் பயோபிக் சினிமாவை தயாரிக்கும் முடிவில் இருந்து அந்நிறுவனம் விலகியிருப்பதாக தகவல்.
இதனால் ராமதாசின் பயோபிக் சினிமாவை சேரனும் கைவிட்டதாக சொல்லப்படுகிறது.
ராமதாஸ் ஏற்படுத்தி இருக்கும் சலசலப்பால் தற்போதைய அரசியல் சூழலில் இந்த சினிமாவை தயாரித்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் நமக்கு இது தேவையில்லாத ஒன்று என லைகா நிறுவனம் நினைத்து பின்வாங்கியிருக்கக்கூடும் , சேரனும் அதையே நினைத்து பின்வாங்கியிருக்கக் கூடும் என்கிறனர்.
ஒரு வேளை வேறு யாரேனும் இந்த சினிமாவை தயாரிக்க முன்வரலாம். அதுவும் இப்போதைய சூழலில் இப்போதே நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.