பாமகவில் உச்சக்கட்டத்தில் இருக்கும் தந்தை – மகன் மோதல் NDA கூட்டணிக்கு பாதகமாக அமையும் என்பதால் அந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக 5.06.2025 அன்று தைலாபுரம் சென்று 3 மணி நேரம் ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆடிட்டர் குருமூர்த்தி.
அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் இந்த பேச்சு வார்த்தையில் உடன் இருந்தார்.
இரண்டாவது முறையாக 7.06.2025 அன்று இரவில் சென்னை தி.நகரில் 1 மணி நேரம் ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் குருமூர்த்தி.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ’’அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல சேதி வரும்’’ என்றார். பாஜகவுடன் பாமக கூட்டணியா? என்று கேட்டபோது, ’’அதை தற்போது கூற முடியாது’’ என்று சொன்னார்.
ராமதாஸ் – அன்புமணி மோதல் வலுக்கும் என்பதுதான் அவர் சொன்ன நல்ல சேதியா?
வழக்கம் போல் அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகளின் பதவியை பறித்து, தனது ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ்.
மக நிர்வாகிகளின் பதவியை பறித்துள்ளார். அதில் மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் என்பவரை நியமித்துள்ளார். இவர் பாமகவிலிருந்து பாஜவுக்கு சென்றுவிட்டு மீண்டும் பாமகவுக்கு தாவியவர்.
அன்புமணிக்கு பக்கபலமாக இருந்த பொருளாளர் திலகபாமாவின் பதவியை பறித்த ராமதாஸ் இன்று அன்புமணிக்கு இன்னொரு பக்கபலமாக இருந்து வரும் பாமக சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலுவின் பதவியைப் பறித்து, வழக்கறிஞர் எஸ்.கோபுவுக்கு அந்த பதவியை வழங்கி இருக்கிறார் ராமதாஸ்.
அதே போல் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா சங்கர் நியமிக்கப் பட்டுள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.
செயல் தலைவர் என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட மனம் இல்லாமல், ராமதாசுக்கு போட்டியாக கட்சியின் தலைவர் என்றே சொல்லிக்கொண்டு, 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு நடைபெறும் அறிவித்திருக்கிறார் அன்புமணி.
மொத்தத்தில் மூன்று மணி நேரம் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் போராடிப்பார்த்தும் ராமதாசை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது பாஜகவின் கட்டப்பஞ்சாயத்து.