
கட்சி அதிகாரம் தன் கைமீறிப் போகிறதோ என்ற அச்சத்தில் கட்சி அதிகாரத்தின் முழுக் கயிற்றையும் இழுத்துப் பிடிக்கிறார் ராமதாஸ். ஆனாலும் அவரால் முடியவில்லை. பாமகவில் அன்புமணியின் கை ஓங்கி நிற்கிறது. பலமிழந்து நிற்கிறார் ராமதாஸ். இதனால் அப்பா – மகனுக்கு இடையேயான இந்த மோதல் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை.
தன் மூத்த மகளின் மகன் முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக கொண்டு வர ஆசைப்பட்டு அதற்கான நியமனத்தை ராமதாஸ் கொண்டு வரும்போது அன்புமணி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அன்புமணிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க, அன்புமணியை தலைவர் ஆக்கியதால் தனக்கே அதிகாரம் இல்லாமல் செய்கிறாரே என்று நினைத்த ராமதாஸ், ’பாமக என் கட்சி. நான் உருவாக்கிய கட்சி. இங்க நான் சொல்லுவதான். நான் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்’ என்று பேச ஆரம்பித்தார் ராமதாஸ்.
அப்போது அப்படி பேச ஆரம்பித்தவர் இன்னும் நிறுத்தவில்லை. வன்னியர் சங்க மாநாட்டு மேடையிலும் அதையேதான் பேசினார்.

முகுந்தனின் இளைஞரணி தலைவர் நியமனத்தில் தொடங்கிய அன்புமணியின் எதிர்ப்பு, வன்னியர் சங்க மாநாட்டு மேடை வரையிலும் தொடர்ந்தது. மாநாட்டு மேடையில் முகுந்தனுக்கு நாற்காலி ஒதுக்க அன்புமணி சம்மதிக்கவில்லை. இதனால் மேடையில் அன்புமணியை யாரும் தலைவர் என்று சொல்லக்கூடாதென உத்தரவிட்டார் ராமதாஸ். இந்த மோதலால் அத்தனை லட்சம் பேர் கூடின மாநாட்டில் அப்பாவும் மகனும் உர்ர்ர்ர் என்று உட்கார்ந்திருந்தார்கள்.
அந்த மாநாட்டிலும் அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களை வறுத்தெடுத்தார் ராமதாஸ்.
முகுந்தனுக்கு அன்று மேடையில் நாற்காலி ஒதுக்க முடியாமல் போன வலி இன்னும் ராமதாசுக்கு போகவில்லை. அதனால் செயற்குழுவை கூட்டி இருந்தார்.
பாமகவின் 108 மாவட்டங்களில் தலைவர், செயலாளர் என்று 216 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். அடுத்து 15 பேராக இருந்தது கூட்டம். அதிக பட்சமாக பார்த்தால் 50 பேர் கூட வந்திருக்க மாட்டார்கள். இதில் மாவட்ட செயலாளர்கள் 11 பேர் மட்டுமே வந்துள்ளனர். செயல் தலைவர் அன்புணியே வரவில்லை.

அவர் ஏன் வரவில்லை? என்று கேட்டால், ‘’வரலாம்; வந்து கொண்டிருக்கலாம். அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது’’ என்று சொன்னார்.
மற்ற நிர்வாகிகள் ஏன் வரவில்லை? என்று கேட்டால், ‘’களைப்பு இருக்கலாம். மாநாட்டு களைப்பில் இருக்கலாம்’’ என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார்.
செயற்குழுவை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கையா? என்ற கேள்விக்கு, ‘’அவர்களாக விரும்புகிறவரையில் நீக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களாக நீக்கச் சொல்லி கேட்டால் மட்டுமே நடவடிக்கை’’ என்றார்.
பாமகவில் அப்பா – மகன் கோஷ்டி பூசல் உள்ளதே? என்ற கேள்விக்கு, ’’மார்கழி மாதத்தில் பஜனை பாடுபவர்களைத்தான் பஜனை கோஷ்டி என்று சொல்லுவார்கள்’’ கேள்விகளுக்கு எல்லாம் சிரித்தபடியே அசால்ட் செய்தார் ராமதாஸ்.
இந்த செயற்குழுவை கூட்டிய நோக்கம் என்ன? என்று கேட்டபோது, ’’பல்வேறு சோதனைகளை, வேதனைகளை எல்லாம் தாங்கி நாளும் கட்சிக்காக, கட்சியின் வளர்ச்சிக்காக அதிலும் குறிப்பாக 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும். ‘தனியா நின்னாலும் குறைந்தது 40 தொகுதிகளில் வெற்றி பெறணும் என்ற வகையில் பாமகவும் வன்னியர் சங்கமும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி? அதற்கு உழைப்பது எப்படி? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அடுத்த கட்டமாக இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பது எப்படி என்ற எனக்குத் தெரிந்த வித்தையை அவர்களுக்கும் கத்துக் கொடுத்திருக்கிறேன்’’ என்று சொன்னவர், தனக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தைச் சொல்லி தன்னை ஓரங்கட்டுவதை விரும்பாததை,
’’சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதே இல்லை. இங்கே சிங்கத்தின் கால்கள் பழுது படவே இல்லை. அப்புறம் சீற்றம் அதிகமாகத்தானே இருக்கும்? ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் அது’’ என்று சொல்லி உணர்த்தினார்.
பொதுக்குழு, மாநாட்டில் அப்பாவும் மகனும் அருகருகே அமர்ந்தாலும் கூட இருவரும் மாறி மாறி சண்டை போடுவது கடும் விமர்சனம் ஆன நிலையில் இன்று செயற்குழுவை தவிர்த்திருக்கிறார் அன்புமணி. ஏனோ அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் இன்று கடுமையாகச் சாடவில்லை ராமதாஸ்.

பாமகவில் அதிகாரம் எல்லாம் தனக்குத்தான் இருக்கிறது என்று சொல்கிறார் ராமதாஸ். ஆனால் அன்புமணிக்குத்தான் எல்லோரும் கட்டுப்படுகிறார்கள். 216 பேரில் 20 பேருக்கு மேல்தான் வந்திருக்கிறார்கள் என்றால் அதிகாரம் முழுவதும் அன்புணி வசமே உள்ளது என்பது தெரிகிறது.
அப்பா – மகன் சண்டையில் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என்று நினைத்தால் இது அப்பா – மகன் சண்டை இல்லை. வெளியே பார்க்கத்தான் அப்படி தெரியும். உண்மை என்னவென்றால் மாமனார் – மருமகள் சண்டை என்று சொல்கிறது தைலாபுரம் வட்டாரம். அது குறித்து உண்மைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் சொல்கிறது தைலாபுரம்.
İstanbul su kaçağı tespiti hizmeti Zeytinburnu’nda evimdeki su kaçağını hızlıca buldular ve hemen onardılar. Teşekkürler. https://www.alkhazana.net/?p=491379
ybdjor