
பொதுமக்களுக்கு எந்த சேசத்தையும் விளைவிக்காமல் துல்லியமாக பயங்கரவாதிகளை மட்டுமே தாக்கி அழித்து வருகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தானோ பொதுமக்களை மட்டுமே துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது.
மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல், பஹல்காம் தாக்குதல் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக கணக்கு தீர்க்க முடிவெடுத்திருக்கிறது இந்தியா. இதில் முதல் முயற்சியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்திருக்கிறது. மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாப்பின் பயிற்சி பட்டறை இருந்த இடம் இந்த தாக்குதலில் தூள் தூளாகி இருக்கிறது.

தொடர்ந்து எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருவதால்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று களமிறங்கி இருக்கிறது இந்தியா. அதனால்தான் சிந்து நதி நீர் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என்று பல அதிரடிகளை காட்டி இருக்கிறது.
இந்தியா ஓங்கி அடித்ததில் பாகிஸ்தானின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டு உலக நாடுகளின் உதவியை நாடுகிறது பாகிஸ்தான். அந்நாட்டின் பிரதமர் பதுங்கு குழியில் தஞ்சமடைந்திருக்கிறார் என்றும் தகவல்.
ஆனாலும் தன் தவறை உணர்ந்து பாகிஸ்தான் அமைதியை நிலைநாட்ட முன்வரவில்லை. அதனால்தான் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,

‘’பாக்கி இல்லாமல்
பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின்
பழிக்குப் பழி படலத்தில்
பதுங்குக் குழியில் பாக். பிரதமர்
ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல்.
போர் முறையுடன் அணுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி yes!
S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது.
ஆயினும்
ஆயினும்
உலக நாடுகள் ஒன்றிணைந்துபாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்!
பின் குறிப்பு:
சரி தவற் என்பதை மீறி இது என் கருத்து மட்டுமே. எழுத்துப் பிழை உட்பட தவறெனில் உடனுக்குடன் திருத்திக் கொள்கிறேன்!
நான் மனிதம் மிகுந்த இந்தியன் !’’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
0tcqq9