
தவெகவை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து சொன்னவர் பார்த்திபன். விஜய்க்கு வாய்ப்பிருக்கிறது என்றும் வெளிப்படையாகச் சொன்னவர் பார்த்திபன். அவர் இன்று விஜய்யுடன் ரகசியமாக சந்தித்து தவெகவுக்கு அரசியல் வகுத்ததாக தனக்கு கனவு வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
’’நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..

அது கனவு! ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் … இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.’’என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் இப்படி பதிவிட்டுள்ளதால், அவர் தவெகவில் இணைகிறாரா என்ற ரசிகர்களின் கேள்விக்கு, தவெக வில் சேர ஆசை இருந்தால் அதை நீங்கள் நேரடியாக செல்லுங்ககள் என்ற கேள்விக்கு, ‘’இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா!இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே!’’ என்று பதில் அளித்துள்ளார்.