
ஆர்த்தியை காதலித்து அவருடன் 16 வருடங்கள் குடும்பம் நடத்திய நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.
ஆர்த்தியை விவாகரத்து செய்ய ரவி விருப்பம் தெரிவித்தும், அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார் ஆர்த்தி.
தங்களது இந்த பிரிவுக்கு காரணம் ஆர்த்தியின் பணத்தாசை, தனது சுதந்திரத்தை பறித்தது, தன்னை பொன் முட்டயிடும் வாத்தாக நடத்தியது உள்பட பல காரணங்களை அடுக்கி இருந்தார் ரவி. ஆனால் ஆர்த்தியோ ரவி தன்னை பிரிவதற்கு காரணம் பாடகி கெனிஷாதான் என்று போட்டு உடைத்தார். அப்போது ரவி அதை மறுத்தார்.
ஆனால், ஆர்த்தி சொன்னது மாதிரியே கெனிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அவருடன் வலம் வருகிறார் ரவி.

ஆர்த்தியுடன் வாழ முடியாது என்று ரவி பிடிவாதமாகச் சொன்னதால் ஆர்த்திக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வழக்கில் வாதம் வந்தபோது, இரண்டு மகன்களுடன் வசிக்கும் தனக்கு மாதந்தோறும் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டிருக்கிறார் ஆர்த்தி. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, ரவியும் ஆர்த்தியும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டினை சுமத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதில் குறுக்கே புகுந்து கெனிஷாவும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் கெனிஷாவை போட்டு வறுத்தெடுக்க, அவர் புலம்பி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
முக்கியமான ஒரு பிரச்சனை இப்படி போய்க்கொண்டிருக்கும் போது, போனில் பேசுவது போன்ற ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு, ‘’செய்திகள் வந்து கொண்டிருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிக்கை வந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்கிறார்.
இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் இப்படி காமெடி செய்கிறாரே என்று நெட்டிசன்கள் போட்டு தாளித்து எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தங்களுக்குக் இடையேயான பிரச்சனை பற்றி அறிக்கை வெளியிட ரவிமோகன், ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தனக்கு எதிராக ஆர்த்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை ரவி மோகன் நாட, பதிலுக்கு தன் மீது அவதூறு பரப்புவதை ரவி நிறுத்த வேண்டும் என்று ஆர்த்தி தரப்பு வாதிட, விவாகரத்து வழக்கு முடியும் வரையிஉம் இருவருமே ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளையும் நீக்கிவிட உத்தரவிட்டுள்ளது.