சென்னையின் அடையாளமாகத் திகழ்கிறது கூவம் ஆறு. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படகு சவாரி, பூங்கா அமைக்கவும் தமிழ்நாட்டு அரசு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
கூவம் ஆற்றை போன்றுதான் மாசடைந்து போயிருக்கிறது அடையாறு. இந்த இரண்டு ஆறுகளும் மாசடைந்திருந்தாலும் இவ்விரு ஆறுகளிலும் ஆண்டுதோறும் வற்றாமல் நீர் சென்று கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் இவ்விரு ஆறுகள்தான் சென்னை மக்களின் இயற்கை மழைநீர் வடிகால்.
இந்த இரண்டு ஆறுகளிலும் சிறிய நீர் மின் நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இவ்விரு ஆறுகள் மாசுபடாமல் தடுக்கப்படும். மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது சிறப்பான என்று சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.