எட்டு கோடி பேர் தாய்மொழியாகப் பேசும் தமிழ்மொழிக்கு கடந்த 10 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கும் ஒன்றிய அரசு, வெறும் 24 ஆயிரம் பேர் தாய்மொழியாக பேசும் சம்ஸ்கிருதத்திற்கு 2,869 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறது ஆர்.டி.ஐ.
சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு நபருக்கு 11 லட்சம் ரூபாய் செலவிடும் ஒன்றிய அரசு, மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களில் ஒருவருக்கு 13,50 ரூபாய் மட்டுமே செலவிடுகிறது.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி பறிய விபரம் கேட்டு, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே.ஈஸ்வரன், தகவல் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய கடிதத்தின் பேரில் இந்த ஓரவஞ்சனை அம்பலமாகி இருக்கிறது.
ஒன்றிய அரசு இந்திய மொழிகளுக்கு செலவிடுகின்ற தொகையில் 61% சமஸ்கிருதத்திற்கே செலவிடுகின்றது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் ஒரு மொழிக்கு மட்டும் இப்படி முன்னுரிமை கொடுப்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் என்று கண்டனம் வலுத்து வருகிறது.