Sagittarius A* (Sgr A*) என அழைக்கப்படும் நமது பால்வீதியின் நடுப் பகுதியில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளை, விண்வெளி நேரத்தையே சிதைக்கும் அளவுக்கு அபரிமிதமான வேகத்தில் சுழல்கிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின்( Royal Astronomical Society) மாதாந்திர இதழில் வெளியிடப்பட்ட இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, நமது பூமி சுற்றுவட்டப் பாதைப் போன்ற ஒரு நீள்வட்ட வடிவத்தில் Sagittarius A* கருந்துளையின் சுழற்சி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Penn State பல்கலைக்கழக பேராசிரியர் ரூத் டேலி தலைமையிலான ஆராய்ச்சிக் குழு நடத்திய இந்த ஆராய்ச்சியில், Sagittarius A* கருந்துளையின் சுழற்சியை அளவிடுவதற்கு சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் மற்றும் Karl G. Jansky Very Large Array (VLA) என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கருந்துளையின் உள்ளே மற்றும் வெளியே சுழலும் பொருட்களின் ஓட்டத்தை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சிக் குழு, Sagittarius A* கருந்துளையானது அதிகபட்சம் 60% கோணத்தில் அதீத வேகத்துடன் சுழல்கிறது என்பதை தீர்மானித்துள்ளனர்.
நிறை(Mass) மற்றும் சுழல்(Spin) என்கிற இரண்டு பண்புகளால் கருந்துளைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
Sagittarius A* கருந்துளை மிக மெதுவாகவும் அல்லது சூழற்சியே இல்லாமல் இருக்கலாம் என முந்தைய ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.
இருப்பினும், இந்த புதிய ஆய்வு Sagittarius A* கருந்துளை உண்மையில் விண்வெளி நேரத்தை விட வேகமாகச் சுழன்று வருகிறது என்பது உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.