Samsung நிறுவனம் இந்தியாவில் Galaxy F15 5G ஸ்மார்ட்போனை இன்று(மார்ச் 04) அறிமுகப்படுத்தியது. குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான Galaxy F15-ன் ஆரம்ப விலை 12,999 ரூபாய்யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6,000mAh பேட்டரி, MediaTek Dimensity 6100+ சிப்செட் மற்றும் 4 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளுடன் வருகிறது.
4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் ஆகியுள்ள Samsung Galaxy F15 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலின் விலை 12,999 ரூபாய்யாகவும், 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை 14,499 ரூபாய்யாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Flipkart மின் வணிக தளத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.
Samsung Galaxy F15 5G – Specifications
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடி விலையுடன் இந்த ஃபோனைப் பெறலாம்.
Jazzy Green மற்றும் Groovy Violet ஆகிய இரண்டு வண்ணங்களில் Galaxy F15 5G போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் 6.5-இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. MediaTek Dimensity 6100+ Processor உடன் வரும் ஸ்மார்ட்போனில், மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
50MP, 5 MP, 2MP சென்சார்களுடன் கொண்ட Triple Camera அமைப்புடனும், 13MP செல்ஃபி Camera அமைப்புடனும் இந்த ஸ்மார்ட்ஃபோன் வருகிறது.
மேலும் USB Type-C போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகளுடனும் Galaxy F15 5G ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.