
Galaxy F06 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 12-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. Galaxy F05 மாடலை 4G நெட்வொர்க் உடன் அறிமுகம் செய்திருந்த சாம்சங், Galaxy F06 மாடலை 5G நெட்வொர்க் ஆதரவைக் கொண்டு அறிமுகம் செய்கிறது.
மற்ற F-சீரிஸ் மாடல்களைப் போலவே, Galaxy F06-ம் Flipkart ஆன்லைன் சந்தையில் கிடைக்கும்.
Samsung Galaxy F06 போன் இந்தியாவின் மலிவான 5G போன்களில் ஒன்றாகவும், இதன் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Samsung Galaxy F06 சிறப்பம்சங்கள்:
Display: 800nits ஹை பிரைட்நஸ் உடன் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
Processor: இந்த போனில் MediaTek Dimensity 6300 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது; AnTuTu பெஞ்ச்மார்க்கில் சுமார் 4,16,000 மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது
Also Read: Starlink உடன் போட்டி போடும் அளவுக்கு Airtel, Jio-வுக்கு திறன் உள்ளதா?
Memory: 6GB வரையிலான RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகிறது
OS: Samsung Galaxy F06 போனில் நான்கு ஆன்ட்ராய்ட் OS அப்டேட்களும், 4 வருட பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது

Cameras: 50MP முதன்மை கேமரா, 2MP டெப்த் லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா இந்த ஃபோன் கொண்டிருக்கிறது
Connectivity: அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிலும் இந்த போன் 12 வெவ்வேறு 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. மேம்படுத்தப்பட்ட இணைப்பின் மூலம், நேரடி ஸ்ட்ரீமிங், வீடியோ அழைப்பு அனுபவம் மற்றும் சிறந்த பதிவிறக்க வேகத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
Battery: இந்த போன் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது; ஆனால் Adaptor-ஐ தனியாக வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Samsung Galaxy F06 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாளை (பிப்ரவரி 12) மதியம் 12 மணி முதல் Flipkart-ல் விற்பனைக்கு வருகிறது.