சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) மாடலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த Samsung Galaxy Unpacked 2024 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
இதோடு சாம்சங் கேக்ஸி இசட் பிளப் 6 (Galaxy Z Flip6), சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold6), கேலக்ஸி வாட்ச்7 (Galaxy Watch7) மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா(Galaxy Watch Ultra) மாடல்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்புடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.
சாம்சங் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி ரிங், பல்வேறு அட்டகாசமான அம்சங்களுடன், வெளிவந்துள்ளது.
Samsung Galaxy Ring Specifications
கேலக்ஸி ரிங் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தப் பல அம்சங்களை அறிமுகம் செய்துள்ள சாம்சங், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களையும் மேம்படுத்தும் வகையில் ரிங்கை வடிவமைத்துள்ளது.
அதன்படி இந்த புதிய ஸ்மார்ட் ரிங் 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. அதேபோல் 5 முதல் 13 சைஸ் அளவுகளில் இந்த சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் வடிவமைப்புக்கு சாம்சங் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
3 கிராம் வரை எடை கொண்ட இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் ரிங் மாடலின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
வெறும் 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 40 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளிரும் LED லைட்களுடன் கூடிய சார்ஜிங் கேஸ் இதனுடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலை குறிப்பாக அன்றாட ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 24 மணிநேரமும் Health Monitoring செய்து தகவல்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் AI Algorithm கொண்ட ஸ்லீப் பேட்டர்ன் (Sleep Pattern) சென்சார் இதில் உள்ளது.
மேலும், மூவ்மண்ட் (Movement), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), சுவாச விகிதம் உள்ளிட்ட பல்வேறு சென்சார் மானிட்டர் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் ரிங் வெளிவந்துள்ளது. மேலும் அட்வான்ஸ் சைக்கிள் டிராக்கிங் (Advanced Cycle Tracking) அம்சமும் இதில் உள்ளதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சமானது ஹெல்த் ரிப்போர்ட் வழங்கும் என்றும் அதாவது தூக்கத்தின் தரம், Activity Level, Sleeping Heart Rate மற்றும் உடல்நலம் குறித்த அறிக்கையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Workout Modes மற்றும் Automatic Workout Detection சப்போர்ட் கொண்டு வருகிறது.
Samsung Galaxy Ring ஆனது Titanium Black, Titanium Silver மற்றும் Titanium Gold ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை $399 (இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 34,000) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சில சந்தைகளில் முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் ரிங், வருகிற ஜூலை 24 முதல் அனைத்து பொது சந்தைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.35,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Also Read: சமாதானம் ஆகாத அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவை சந்திக்க முடிவு!