தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காக கவுன்சிலிங் கொடுப்பதற்காகவே நிறைய அமைப்புகள் உள்ளன. தற்கொலை எண்ண மனதை மாற்றும் புத்தகங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் மீறி தற்கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
தற்கொலை செய்துகொள்வது கொடுமை என்றால் அதைவிட கொடுமையானது தற்கொலையில் உயிர் துறக்கும் வலிகள். இலேசான தீப்பொறி உடலில் பட்டாலோ, கிச்சனின் தாளிக்கும்போது ஒரு துளி எண்ணெய் தெறித்து விழுந்தாலோ அலறித்துடிப்போம். அப்படி இருக்கும் போது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தால் எப்படி இருக்கும்? அதனால்தான் தீக்குளிப்பவர்கள் ஓலமிட்டுக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி மோதி கடும் போராட்டத்தில் உயிர் துறப்பர்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் இந்த ரகம்தான். கயிறு தொண்டையை அழுத்தும் அந்த நிமிடங்களில் எழும் வலி கொடுமையானது. இதை எல்லாம் நினைத்துதான் சிலர் மருந்து குடித்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்துவிட நேராமல் உயிர்பிழைத்து அதற்காக சோப்புக்கரைசல் உள்ளிட்டவற்றை குடித்து வாந்தி எடுக்கும் அவஸ்தை எல்லாம் மறுபடியும் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என்ற நிலைமையை கொடுத்துவிடும்.
இதனால்தான் சிலர் தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கின்றனர். தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு இது மாதிரியான மாத்திரைகளை விற்க மருந்ததகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் விதிவிலக்காக தற்கொலை இயந்திரமே வந்துவிட்டது. அதுவும் வெறும் 1600 ரூபாய் கட்டணத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிறது தி லாஸ்ட் ரிசார்ட் நிறுவனம். நெதர்லாந்தைச் சேர்ந்த இந்நிறுவனம், ’சர்கோ காப்ஸ்யூல்’எனும் தற்கொலை இயந்திரத்தை தயாரித்துள்ளது.
12 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பின்னர் ரூ.6 கோடி செலவில் இந்த சர்கோ காப்ஸ்யூல் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களோ, விலங்குகளோ சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை இந்நிறுவனம் உறுதி அளித்திருக்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் அனுமதி இருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று விருப்புவர்களுக்கு முதலில் மனதிடம் பற்றிய தேர்வு வைக்குமாம் இந்நிறுவனம். அதில் தேர்ச்சி பெற்றதும் இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக்கொள்ள வேண்டுமாம்.
‘நீங்கள் உயிர்துறக்க விரும்பினால் பட்டனை அழுத்தவும் என்ற குரல் வந்ததும் பட்டனை அழுத்தினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் வலியின்றி உயிர் பிரிந்துவிடுமாம். பட்டனை அழுத்தியதும் ஆக்சிஜன் வாயும் குறைக்கப்பட்டு நைட்ரஜன் வாயும் நிரப்பப்படுவதால் ஹைபோக்சியா பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டு மயங்கிய நிலையிலேயே உயிர் பிரிந்துவிடுமாம். கணினி வழியாக இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கும் ஒரு டீம்.
இந்த தற்கொலை இயந்திரம் பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.