ஒரு முன்னணி நடிகருடன் தன் மகன் விஜய் நடித்தால் மார்க்கெட் அஸ்தஸ்து வந்துவிடும் என்று அப்போது முன்னணி நடிகராக இருந்த சத்யராஜிடம் சென்று செந்தூரபாண்டி படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதற்காக தினமும் சத்யராஜ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறாது எஸ்.ஏ.சி.
ஒரு முடிவும் சொல்லாமல் நாட்களை நகர்த்திக்கொண்டே சென்றதால், பொறுமையிழந்த எஸ்.ஏ.சி. விஜயகாந்திடம் சென்று கேட்க, அவர் அடுத்த நொடியே சரி என்று சொல்லி நடித்துக்கொடுத்துவிட்டார்.
பின்னாளில் விஜய் பிரபலம் ஆன பின்னர் அவருடன் நண்பன், மெர்சல், தலைவா படங்களில் நடித்தார் சத்யராஜ். விஜய்யை ஏகத்துக்கும் பட விழாக்களில் பேசி வந்தார் சத்யராஜ். ஆனால், கருத்து முரண்பாடு வந்தவுடன் விஜய்யுடன் நடிக்க முடியாது என்று தவிர்த்திருக்கிறார் சத்யராஜ்.
தவெகவை ஆரம்பித்து மாநாட்டை நடத்தி அதில் திமுகவை கடுமையாக விமர்சித்து, தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார் விஜய். இந்நிலையில் எச்.வினோத் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க சத்யராஜை கேட்டிருக்கிறார்கள். அவர் நடிக்க மறுத்ததும், பெரிய தொகை தருகிறோம் என்று பேசியிருக்கிறார்கள். விஜய்யே கேட்டுக்கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
அதற்கு சத்யராஜ், ‘’முன்பு விஜய் நடிகராக மட்டும் இருந்தார். அதனால் அவர் படங்களில் நடித்தேன். இப்போது அரசியல்வாதியாகிவிட்டார். அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால் எவ்வளவு தொகை கொடுத்தாலும் விஜய் படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்று மறுத்திருக்கிறார்.