சவுதி அரேபியாவின் (Saudi Arabia) மதீனா அருகே பேருந்தும் டீசல் லாரியும் மோதியதில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 42 உம்ரா பயணிகள் உயிரிழந்துள்ளனர். மெக்கா இருந்து மதீனாவிற்கு பயணித்த 43 பேர் கொண்ட பேருந்து அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உம்ரா சடங்குகளை முடித்து மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்களுக்கு உதவ சவுதி அரசு சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. குடும்பத்தினர் இந்த 79979-59754 , 99129-19545 எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
