பாஜகவில் இருந்து நீக்கப்பட்டது முதல் அண்ணாமலை எதிரான ஆடியோக்களை வெளியிட்டு வந்த திருச்சி சூர்யா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான ஆடியோக்களையும் வெளியிட்டு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இன்று அவர் யூடியூபர் சவுக்கு சங்கர், காவல்துறை பெண் அதிகாரியுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அந்த பெண் அதிகாரி ரொம்பவே குரலை தாழ்த்தி பேசுகிறார். சவுக்கு சங்கரோ குரலை உயர்த்தி பேசுகிறார். சக அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் சொல்கிறார்.
சவுக்கு சங்கரிடம் அந்த பெண் காவல்துறை அதிகாரி ஏன் இப்படி பம்மிப்பேச வேண்டும்? தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக சக அதிகாரிகள் குறித்து வெளிநபருக்கு ஏன் தகவல் கொடுக்கிறார்? என்ற கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்கள், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரைப்போன்ற கருப்பு ஆடுகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆடியோவை வெளியிட்ட திருச்சி சூர்யாவும், ’’ஆட்சிக்கு எதிராக அதிக அவதூறுகளும், அவப்பெயர்களும் உருவாக்கப் படுகின்றன. அரசாங்க அதிகாரிகள் சிலர்தான் இதற்கு காரணம். இதுமாதிரியான அதிகாரிகள் அண்ணாமலை, சீமான், சவுக்கு சங்கர் போன்றோரிடம் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால், அந்த பெண் காவல் அதிகாரி 2020 -21 காலகட்டத்தில் விஜிலென்ஸ் ஏடிஎஸ்பி ஆக இருந்தார். அதனால் இந்த உரையாடல் எப்போது நடந்தது? ஆடியோ வெளியிடும் போது அந்த காலகட்டத்தையும் சேர்த்து சொல்வது நல்லது என்கின்றர் சில நெட்டிசன்கள்.