உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் மூலம் நிரம்பாத பணியிடங்களை பொதுப் பிரிவில் நிரப்ப பல்கலைக்கழக மானியக் குழு அதிர்ச்சிகர முடிவை எடுத்துள்ளது.
இது குறித்தான வரைவு மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க இன்றே(ஜனவரி 28) கடைசி நாளாகும்.
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
அதற்கான நடவடிக்கையை எடுக்காத UGC, இட ஒதுக்கீடு பணியிடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்ற முயற்சிப்பது கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பதவி உயர்வுகளிலும் போதுமான SC, ST பிரிவினர் இல்லாதபட்சத்தில் அதை பிற பிரிவினருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
UGC-ன் இந்த புதிய வழிமுறைகள் பல்கலைக்கழகங்களில் உள்ள பணியிடங்களை இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றாமல் நேரடியாக பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்ய வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த வழிமுறைகள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விதிமுறைகளை செல்லுபடியாகாத நிலைக்கு கொண்டு செல்லும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.