திமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வது போன்று அதிமுக சித்தரித்து வரும் நிலையில், அதிமுக ஆட்சியில் கள்ளச்சாரயமே விற்கப்படவில்லை என்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர்ராஜு. அவர் சொல்வது பொய் என்று ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களை சாட்சியாக சொல்லி அம்பலப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2023ல் மே மாதம் மரணக்கானத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேரும், மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்தனர் . தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம் கிராமத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் திமுக ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் அதிமுகவினர்.
கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பேரவையிலும் இது குறித்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை. திமுக ஆட்சியில்தான் விற்கப்படுகிறது . கள்ளச்சாராய விற்பனைக்கு செந்தில்பாலாஜிதான் காரணம்’’ என்று கூறியிருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை என்றால் எப்படி இத்தனை கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தன? என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
*கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் 2001(அதிமுக ஆட்சி)ல் பன்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கண் பார்வையினை இழந்தனர்.
*2001ல் சென்னை அடுத்த செங்குன்றம் கோட்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
*2017(அதிமுக ஆட்சி)ல் தருமபுரி மாவட்டம் எரியூரில் 4 பேர் உயிரிழந்தனர்.
* 2018ல் திருவாரூர், குடவாசலில் ஒருவர் உயிரிழந்தார்.
*2020(அதிமுக ஆட்சி)ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்தில் மூவர் உயிரிழந்தனர்.
* 2020ல் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் மூவர் உயிரிழந்தனர்.
*2003(அதிமுக ஆட்சி)ல் நாமக்கல் மாவட்டம் போத்தனூர் – தேவராயசமுத்திரம் பகுதியில் 9 பேர் உயிரிழந்தனர்.
* திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு கிராமத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
*கல்வராயன் மலையில் 25 ஏக்கர் பரப்பளவில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகர் சுரேஷை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் 120க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்திருக்க, அதிமுக ஆட்சியில் கள்ளச்சாரயமே விற்கப்படவில்லை என்று ஏன் வாய்கூசாமல் பொய் சொல்கிறார் செல்லூர்ராஜூ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.