டெல்லியில் நடக்கும் ‘2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ’வில், பெங்களூரை தளமாகக் கொண்ட சர்லா ஏவியேஷன் நிறுவனம், தனது எதிர்கால விமான டாக்ஸி முன்மாதிரியை அறிமுகம் செய்தது
சிறப்பம்சங்கள்:
🔹வரும் 2028-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் ஏர் டாக்ஸி சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களை சர்லா ஏவியேஷன் வெளியிட்டுள்ளது
🔹‘Shunya’ ஏர் டாக்ஸியால் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும்; இது 20-30 கி.மீ. குறுகிய பயணங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
🔹இந்த ஏர் டாக்ஸியில் 6 பயணிகளை உள்ளே ஏற்றிக்கொண்டு அதிகபட்சமாக 680 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்; நகர்ப்புற பயணத்திற்கு ஏற்றதாக இது அமைந்துள்ளது
🔹பெருநகரங்களில் இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை சர்லா ஏவியேஷன் ஆராய்ந்து வருகிறது
🔹பெங்களூரில் தொடங்கப்பட்ட பிறகு, சர்லா ஏவியேஷன் தனது ஏர் டாக்ஸி சேவைகளை மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது
🔹அதிக பேலோட் திறன் கொண்ட இந்த மின்சார ஏர் டாக்ஸி, செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுமையான போக்குவரத்து முறை சாலைகளில் நெரிசலைக் குறைக்கும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் குறுகிய தூரப் பயணங்களுக்கு மிகவும் திறமையான மாற்று போக்குவரத்து முறையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘Shunya’ ஏர் டாக்ஸி, குறிப்பாக அவசரகால சேவைகளுக்கும் நெருக்கடியான சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு கேம் சேஞ்சர் போக்குவரத்து முறையாக மாறும் என கருதப்படுகிறது.