தமிழ்சினிமாவில் வசூலில் நெம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் ரஜினிகாந்த். சமீப காலங்களில் விஜயின் சில படங்கள் ரஜினி படங்களை முந்தியதன் விளைவு, அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை எழுக் காரணமானது.
கடைசிப்படம் ஜனநாயகன் என்று சொல்லுவதால், இந்த படத்திற்கான வியாபார வசூலில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்த வேண்டும். அந்த மைல்கல்லினை பின்னாள் வரும் யாரும் தாண்ட முடியாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களின் திட்டமாக இருந்தது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியை சிவகார்த்திகேயன் அடித்து காலி செய்துவிட்டார். ஜனவரி மூன்றாம் தேதி வந்த ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீசுக்கு இரண்டு நாளில் 39,770,518 வியூஸ் உள்ள நிலையில், ஜனவரி 4ம் தேதி வெளிவந்த பராசக்தி படத்தின் டிரைலர் ரிலீசுக்கு ஒரு நாளில் 41,980,304 வியூவ்ஸ் வந்திருக்கிறது. 2 நாட்கள் ஆகியும் சிவகார்த்திகேயனின் ஒரு நாள் சாதனையை முறியடிக்க விஜயால் முடியாமல் போய்விட்டது. விஜய் திட்டத்தின் ஒரு பகுதியை சிவகார்த்திகேயன் காலி செய்துவிட்டதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள்.

ஆந்திராவில் கிண்டிய பாலய்யா கேசரியை வினோத் இங்கே சூடு செய்து கொடுப்பதுதான் இந்த போதிய வர வரவேற்பின்மைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் மாணவர்களின் மொழிப்போர் போராட்டம் குறித்த பராசக்தி படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ரஜினி, அஜித் படங்களை விடவும் விஜய் படம் வசூலில் முதலிடம், டிரைலர் ரிலீசில் முதலிடம், பாடல் ரிலீசில் முதலிடம் என்று மார்தட்டி வந்த விஜய் ஆதரவாளர்கள், இப்போது எஸ்.கே. படம் விஜய் படத்தை முந்தி இருக்கும் போது மட்டும், இணையப்படை வைத்து வியூவ்ஸ் ஏற்றிக்காட்டி இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.
அதனால்தான், விஜய்க்கு வந்தால் ரத்தம், எஸ்.கே.வுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
