கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு மத மற்றும் கலாச்சார விழா. இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை :
நாட்டு மக்களிடம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump), தான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக, ஒரு வெளிநாட்டினரை கூட சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளதாகவும், 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்ததாகவும், மேலும், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், இதனால் 3000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீட்டை தான் ஈர்த்துள்ளதாக தெரிவித்தார் (வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், வளர்ச்சி, தொழிற்சாலைகள் திறப்பு மற்றும் மிகச் சிறந்த தேசிய பாதுகாப்பு ஆகும்). மேலும், இந்த வெற்றியின் பெரும்பகுதி வரிகளின் மூலம் சாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், அமெரிக்காவில் நிறுவனங்களைக் கட்டினால் வரிகள் இல்லை என்று தெரிவித்ததால், இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் அமெரிக்காவில் அவர்கள் கட்டி வருகின்றனர் என்றும் தெரிந்தார்.
ராணுவ வீரர்களுக்கு ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு
தொடர்ந்து பேசிய அவர், ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாகத் தலா $1,776 (இந்திய மதிப்பில் சுமார் ₹1.50 – ₹1.60 லட்சம்) வழங்கப்படும் என தெரிவித்தார்.

முக்கியத் தகவல்கள்:
- இந்தத் தொகைக்கு “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- அமெரிக்கா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1776-ஐ நினைவுகூரும் வகையில், சரியாக $1,776 வழங்கப்படுகிறது.
- சுமார் 14.5 லட்சம் (1.45 million) ராணுவ வீரர்கள் இதைப் பெறுவார்கள். இதில் தற்போது பணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் சில ரிசர்வ் படை வீரர்கள் அடங்குவர்.
- இத்திட்டம் O-6 (கர்னல்/Colonel) மற்றும் அதற்குக் குறைவான பதவிகளில் உள்ள வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு (Veterans) இந்த உதவித்தொகை வழங்கப்படாது.
- வர்த்தக வரி (Tariffs) மூலம் அரசுக்குக் கிடைத்த கூடுதல் வருவாயிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இந்தப் பணம் வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாகவே வீரர்களின் வங்கிச் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும், பணவீக்க காலத்தில் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
