ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கோலிவுட்டில் மீண்டும் பற்றி எரிகிறது ‘சுசி லீக்ஸ்’ விவகாரம். இதில் தற்போது சுசித்ரா பேட்டியில் சொன்ன விசயங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார்.
கடந்த 2016ம் ஆண்டில் ‘சுசி லீக்ஸ்’ #suchileakes எனும் பெயரில் த்ரிஷா, ஆண்ட்ரியா, அனுயா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நடிகைகள் மற்றும் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி கோலிவுட் வட்டாரத்தை அதிரவைத்தது. இதற்கெல்லாம் சுசித்ராதான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். சுசித்ராவுக்கு மனநலம் பாதிப்பு என்று கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தனது கணவர் நடிகர் கார்த்திக்குமாரை 2017ல் விவாகரத்து செய்தா பிரபல ரேடியே மிர்ச்சி ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா.
திரையுலகமும், பத்திரிகைகளும் சுசித்ராவை போட்டு வறுத்தெடுத்தன. அதன் பின்னர் அவரைப்பற்றிய செய்திகள் இல்லை. அமைதியைத்தேடி வெளிநாடு சென்றுவிட்டதாக அவரே இப்போது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இடையில் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
அண்மையில் அவர் யூடியூப் தளத்திற்கு அளித்திருந்த பேட்டியில், ‘’சுசி லீக்ஸ் விவகாரத்தில் தேவையில்லாமல் என்னை இழுத்து விட்டார்கள். என் கணவர் கார்த்திக்குமாரும், நடிகர் தனுஷும் தான் இதற்கெல்லாம் காரணம். த்ரிஷாவே தன்னோட பிரைவேட் படங்களை கொடுத்தார். ஆனால், நான் பலிகடா ஆகிவிட்டேன். இந்த விவகாரத்தால் நான் எல்லோராலும் ஒதுக்கப்பட்டேன். கோவிலுக்கு சென்று தினந்தோறும் அழுதுவிட்டு வருவேன். அப்புறம் நிம்மதி தேடி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன்’’ என்று சொல்லி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், ‘’ என் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர். அவரும் நடிகர் தனுஷும் ரூமுக்குள் சென்று தனியாக இருப்பார்கள். வேறு இரண்டு நண்பர்களுடன் என் கணவர் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தங்குவார். இதனால் சந்தேகம் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தேன். அதில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது உறுதியானது. அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு 14 வருடங்கள் போராடினேன்’’ என்று சொல்லி இருந்தார்.
மேலும், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மீனா, கமல்ஹாசன் குறித்தெல்லாம் பேசி அதிரவைத்திருந்தார்.
இதற்கு கார்த்திக் குமார், ‘’நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை. அப்படி இருந்தால் அதை வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டியது இல்லை. அது ஒன்றும் அவமானம் இல்லை. அதை நான் பெருமையாகவே நினைப்பேன். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்’’ என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், தன்னைப்பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் கார்த்திக் குமார். சுசித்ரா சொன்னது பொய்யானவை என்று தெரியாமல் அதை உறுதிப்படுத்தாமல் பேட்டியை வெளியிட்டுள்ளனர். அதனால் அந்த பேட்டியை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
இதற்கிடையில், சுசித்ராவை திட்டி கார்த்திக் குமார் பேசியதாக பரவும் ஆடியோவில் , பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி கார்த்திக் குமார் மீது நடவடிக்கை கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் புகார் கொடுத்திருக்கிறது.
மீண்டும் வலுக்கிறது சுசி லீக்ஸ்.