
9 நாட்களில் திரும்புவதாக சர்வதேச விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப கோளாறினால் 9 மாதங்களாக சிக்கி தவித்து நாளை பூமி திரும்புகிறார். மிக நீண்ட காலமாக விண்வெளியில் இருந்துவிட்டு பூமி திரும்புவதால் சுனிதா வில்லியம்ஸ்சினால் உடனடியாக நடக்க முடியாது என்பதோடு மேலும் சிக்கல்களை அவர் சந்திக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சாதனை:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவரின் தந்தை குஜராத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஆவார். ஐக்கிய அமெரிக்க கப்பல் படையின் விமானியாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், 1998இல் நாசா விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியிலேயே பயணம் செய்தவர் என்ற சாதனையை படைத்திருக்கும் சுனிதா வில்லியம்ஸ், 2007ஆம் ஆண்டில் விண்வெளியில் மாரத்தான் ஓடி சாதனை படைத்தார்.

தொழில்நுட்ப கோளாறு:
சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் அமெரிக்க போயிங் நிறுவனம் உருவாக்கின ‘ஸ்டார்லைனர் விண்கலம்’ கடந்த 5.6.2024இல் விண்வெளி நிலையத்தினை அடைந்தது.
9 நாட்களில் பூமி திரும்புவது என்ற இலக்கோடு விண்வெளிக்குச் சென்ற இருவரும் தொழில்நுட்ப கோளாறினால் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலேயே சிக்கி இருக்கும்படியான நிலை வந்தது. விண்வெளியில் சிக்கித்தவித்த இருவரையும் மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரப்பட்டன.
அதில், இருவரையும் மீட்டு வர, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தது. இதில் பயணித்து நாளை பூமி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது பூமிக்கு வருகிறார்கள்?
நாளை பூமிக்குப் புறப்படும் இவர்கள், வரும் 19ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி அன்று பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்து சேரும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?
புவீஈர்ப்பு சக்தி இல்லாமல் விண்வெளியில் அதிக நாட்கள் இருந்துவிட்டு பூமிக்கு வருவதால் உடல் பல்வேறு சிக்கல்கலை எதிர்கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புவீஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில் எலும்பு அடர்த்தி குறைவு, தசைகள் தளர்ச்சி, கண் நரம்புகளில் அழுத்தம், மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். ரேடியேஷன் காரணமாக கேன்சர் வருவதற்கும் வாய்ப்புண்டு. இந்த நிலையில் பூமி வரும் போது ஓரிடத்தில் நிற்க முடியாது, நடக்கவும் முடியாது. விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்ததால் புவீஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து சமநிலையில் நிற்க முடியாது. இந்த சிக்கல்கள் தற்காலிகமானதுதான். சில பயிற்சிகள் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நாசா தரப்போகும் சன்மானம் என்ன?
விண்வெளியில் அதிக நாட்கள் இருந்ததால் சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா தரப்போகும் சன்மானம் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியதற்காக கூடுதல் சம்பளம் எதுவும் நாசா வழங்காது என்கிறார் ஓய்வு பெற்ற நாசா விஞ்ஞானி கேடி கோல்மேன்.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் அமெரிக்க அரசின் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள். இவர்களது ஆண்டு சம்பளம் 1.08 முதல் 1.41 கோடி என்பதால் அந்த தொகை கிடைக்கும் என்றும் பலர் சொல்லி வருகின்றனர். 9 மாதம் சம்பளம் மற்றும் சிறப்பு ஊதியம் என்று 80 லட்சம் ரூபாயில் இருந்து 1.06 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றும் பலர் சொல்லி வருகின்றனர்.
peaegu
ewzhmc
tv1cfx
foep9s
cqck5t
ivff1c