
1975ல் தொடங்கிய ரஜினியின் திரையுலக பயணம் 170க்கும் மேற்பட்ட படங்களைத் தாண்டி 2025ல் 50ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ளது. இதை முன்னிட்டு ரஜினி பற்றிய 50 அபூர்வ ராகங்கள்…
1.OMRல் ஸ்டீயரிங் பிடிக்காமல் 2 கி.மீ. கார் ஓட்டுவார் ரஜினி; ஒருமுறை கே.எஸ்.ரவிக்குமார் இதைப்பார்த்து பதறிப்போய் ரஜினியின் இரண்டு கைகளையும் எடுத்து ஸ்டீயரிங்கில் வைத்திருக்கிறார்
2.’உள்ளே வெளியே’படம் பார்த்துட்டு பார்த்திபனுடன் இணைந்து நடிக்கும் முடிவை கைவிட்டார் ரஜினி. பார்த்திபனின் துருதுரு ஆக்டிவ்வை பார்த்து அவரை ஹீரோவாக நடிக்கச்சொன்ன ரஜினி, அடுத்து இணைந்து பண்ணலாம் என்று சொல்லி இருந்தார். உள்ளே வெளியே படத்தில் பார்த்திபனின் ஸ்டைலைப் பார்த்துவிட்டு, ’’இணைந்து நடித்தால் சரிப்பட்டு வராது. நீங்க கேமராவுக்கு பின்னால் இருங்க, நான் கேமராவுக்கு முன்னாடி இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டார். இவர்கள் காம்பினேஷனில் படம் வராமல் போய்விட்டது.
3.1999ல் ரஜினியின் புகழை லியோனார்டோ டிகாப்டியோவின் புகழுடன் ஒப்பிட்டது ‘நியூஸ் வீக்’ பத்திரிகை
4.ரஜினியின் ஒவ்வொரு படத்தின் ரிலீசின்போதும் முதல் நாள் முதல் காட்சி காண சென்னை வருகிறார்கள் ஜப்பான் ரசிகர்கள்
5.பாபா படத்திற்கு பிறகு அதிகம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் கூலி. டிக்கெட் புக்கிங்கிலும் வசூல் சாதனையிலும் உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது

6.சென்னை, பெங்களூருவுல் உள்ள பல ஐடி நிறுவனங்கள் ரஜினி படம் ரிலீஸ் நாளில் விடுமுறை அறிவித்து ஊழியர்களுக்கு ரஜினி பட டிக்கெட்டும் புக் செய்து கொடுப்பது வழக்கம். கூலிக்கு சிங்கப்பூர் தனியார் நிறுவனமும் இதே பாணியை பின்பற்றி இருக்கிறது
7.2002ல் பாபா, 20214ல் லிங்கா படங்கள் சரியாக ஓடாததால் விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுத்தார் ரஜினி
8.பெங்களூருவில் ரஜினி நடத்துனராகப் பணியாற்றிய பேருந்து எண் – 10A
9. பிரசவ வலியினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைக்க 2003ல் குரு சிஷ்யன், முத்து, அருணாச்சலம் படங்களை பார்த்தார் ரசிகை ஸ்மிதா சர்மா ரங்கநாதன்

10.கபாலி படத்திற்கு பிரம்மாண்ட கூட்ட விமானத்தில் விளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அந்தப் படத்தின் முதல் காட்சியை சென்னை ரசிகர்களுடன் கொண்டாட தனி விமானத்தில் பெங்களூருவில் இருந்து 180 ரசிகர்கள் சென்னை வந்தனர். இது சிறப்பு ஏற்பாடு.
11. முதல் படம் அபூர்வ ராகங்கள் 15.8.1075ல் வெளிவந்தது. 50ஆவது ஆண்டில் அதே நாளில் கூலி படம் ரிலீஸ். முதல் படம் ரிலீஸ் ஆன தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் கூலி படமும் ரிலீசாகிறது
12.எழுத்தாளர் ராமகிருஷ்ணனை வைத்து தனது சுய சரிதையை எழுதி வந்த ரஜினி, நிறைய உண்மைகளை சொல்ல வேண்டி இருந்ததால் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இப்போது மீண்டும் சுயசரிதை எழுதி வருகிறார்
13.’’பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்?’’ இதுதான் ரஜினி, சினிமாவில் பேசிய முதல் டயலாக்

14. தான் இயக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தின் ஸ்ரீகாந்த் – ரஜினிகாந்த் கேரக்டர்களின் பெயர்களை சினிமாவில் இரு நடிகர்களுக்கு வைத்தார் பாலசந்தர். அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆனார்
15.நாடக புகழ் மயக்கத்தில் சென்னைக்கு வந்து பிளாட்பாரத்தில் தங்கி கட்டட வேலை பார்த்துக் கொண்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காததால் கையில் பணமும் இல்லாமல் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பெங்களூர் சென்ற ரஜினிக்கு டிக்கெட் கொடுக்கும் பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது
16. வசதியான வீடு, மனதிற்கேற்ற மனைவி, சினிமா புகழ்.. இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்? என்று சாவி பத்திரிகைக்காக கணவர் ரஜினியை லதா பேட்டி எடுத்தபோது, ‘’நான் விரும்புவது தனிமையை’’ என்றார் ரஜினி
17. 1979 காலகட்டங்களில் ரஜினி ரொம்ப டென்சன் பேர்வழி. ‘’உங்கள் பொழுதுபோக்கு என்ன?’’ என்று கேட்ட நிருபரிடம், ‘’தண்ணி அடிப்பேன்.. பொண்ணுங்களோட ஜாலியா இருப்பேன்.. பொழுதுபோக்கெல்லாம் தனிப்பட்ட விஷயம்’’ என்று கொந்தளித்தார்.
18.அரசியலில் நுழைய அருமையான சூழல் வாய்த்திருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதன் மூலம் தாம் ஒரு கிரேட் மேன் என்பதை நிரூபித்து விட்டார் ரஜினி என்று பாராட்டினார் கே.பாலசந்தர்
19.ரஜினியின் 25ஆவது ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு அதற்கு லதா ரஜினிகாந்தே தலைமை தாங்கி விழா எடுத்தார்
20.1996 தேர்தலில் ரஜினி பக்க பலத்தை வைத்து அதிமுகவை தோற்கடித்தது திமுக – தமாகா கூட்டணி
21.கிருஷ்ணகிரிஅருகே நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் ரஜினியின் அப்பா ரானோஜிராவ் கெய்க்வாட்.
22.கோவை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பிறந்தவர் ரஜினியின் அம்மா ராம்பாய்
23.ரானோஜிராவ்க்கு கர்நாடக போலீசில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டார்கள்
24.நானோஜிராவ் முன்னோர்கள் மராட்டிய மன்னன் சிவாஜியின் மெய்க்காப்பாளர்கள் படையில் இருந்தவர்கள்
25.சிவாஜிராவ் (ரஜினி)க்கு 7 வயதாக இருக்கும் போதே அம்மா ராம்பாய் மறைந்துவிட்டார்
26.பெங்களூரு பசவன்குடியில் பிரிமியம் மாடல் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார் ரஜினி
27.ராம்பாய் மரணத்திற்கு பிறகு ரஜினியின் அடாவடித்தனம் அதிகமானதால் 16 வயதில் ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்
28. அடையாறு திரைப்படக் கல்லூரியில் 1974ல் படித்துக் கொண்டிருந்தபோது சிறப்பு விருந்தினராகச் சென்ற இயக்குநர் பாலசந்தரிடம், ரஜினியை அறிமுகப்படுத்தி வைத்தார் ஆசிரியர் கோபாலி. ரஜினியின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் பாலசந்தரை ஈர்த்தது
29.பாலசந்தரின் அலுவலகத்தில் இருந்து ரஜினி(சிவாஜிராவ்)க்கு அழைப்பு. ஏதாவது நடிச்சுக்காட்டு என்று பாலசந்தர் சொல்லவும், ரஜினி நடித்துக்காட்டியதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பாலசந்தர். என்ன சொல்லப்போகிறாரோ என்ற படபடப்பில் இருந்த ரஜினியிடம், ‘’உன்னை என்னோட 3 படங்கள்ல ஒப்பந்தம் செய்கிறேன்’’ என்றார்.

30. ‘அறிமுகம் ரஜினிகாந்த்’ என்பதற்கு பதிலாக, ‘ரஜனிகாந்த்’ என பிழையுடன் முதல் பட டைட்டில்கார்டு வந்தது. முதல் பட டைட்டில்கார்டு பிழையுடன் வந்தாலும் பின்னாளில் அவர்தான் இந்திய கமர்சியல் சினிமாவின் தலையெழுத்தையே திருத்தினார்.
31.முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போது இசையுடன் தொடர்புடைய வாசகம் வரும். ரஜினியை காட்டும் போது மட்டும் ‘சுருதி பேதம்’ என்ற வாசகம் வரும். அதாவது அபஸ்வரம். எதிர்மறையான அடையாளத்துடன் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளாக சுப்பர் ஸ்டார் நாற்காலியில் யாரும் அசைக்கமுடியாத வண்ணம் அமர்ந்திருக்கிறார்

31.தாய்மொழி மராட்டியம், வளர்ந்த கன்னடம், ஆங்கிலமும் தமிழிலும் தெரியும் என்பதால் பேச்சில் ஒரு தனித்தன்மை இருக்கும். அதனால்தான் தெள்ளத்தெளிவாக வசனத்தை பேசி நடிப்பது என்கிற சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்டையே மாற்றினார் ரஜினி.
32.அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியின் கேடரக்டர் பெயர் ‘பாண்டியன்’. பின்னாளில் தான் நடித்த படத்திற்கு பாண்டியன் என்றே பெயர் வைத்தார்
33.1977ல் 15 படங்களில் நடித்தார் ரஜினி. அதில் புவனா ஒரு கேள்விக்குறி படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது
34. ரஜினிக்கு வில்லத்தனம்தான் வரும். செண்டிமெண்டான கேரக்டர்களில் நடிக்க வராது என்ற விமர்சனம் இருந்ததால் ஹீரோவான சிவக்குமாரை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக வைத்து புவனா ஒரு கேள்விக்குறி படத்தை இயக்கினார் எஸ்.பி.முத்துராமன்
35. தமிழ், தெலுங்கு, கன்னம் என்று 1978ல் 20 படங்களில் நடித்தார் ரஜினி. அதில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம் நல்ல பெயரை தந்தது.
36.சினிமாவில் தான் முதலில் பேசிய டயலாக் ‘பைரவி’ என்பதாலேயே ‘பைரவி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி.
37.பைரவி படத்தின் விநியோகஸ்தர் கலைப்புலி எஸ்.தாணு, போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று அச்சிட்டார். அன்று முதல் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்
38.ரஜினிக்கு ரொம்ப முக்கியமான ஆண்டு1979. ஆறிலிருந்து அறுபது வரை படம் அவரின் நடிப்பாற்றலுக்கு ஒரு இலக்கணமாக அமைந்தது.
39.பொல்லாதவன் பட ஷூட்டிங்கின்போது சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிகள் கல்லூரி சிறப்பிதழ்க்காக ரஜினியை பேட்டி எடுத்தனர். அதில் ஒரு மாணவி லதா, உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேட்க, ‘’உங்களை மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்தவுடன்..’’என்று ரஜினி பதில் சொல்ல அந்தக்கணம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது
40.நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கை லதாவுக்கும் ரஜினிக்கும் 26.2.1981ல் திருப்பதி கோவிலில் திருமணம் நடந்தது
41.பல விஷயங்களில் மற்றவர்களின் அபிப்ராயத்தைக் கேட்கும் ரஜினி, தன் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை சொல்லமாட்டார்
42.படையப்பாவில் நீலாம்பரியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டார் ரஜினி. அது முடியாமல் போன வருத்தம் இப்போதும் உண்டு.

43.ஷூட்டிங்கில் நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் ரஜினி, கடுமையாக டிராபிக் நெரிசலால் எந்திரன் படப்பிற்கு தாமதமாக சென்றதால், ஸ்கூல் பையன் மாதிரி சாரி கேட்ட பின்னரும், ஷங்கரும், அவரது மேலாளரும் கண்டிப்பு காட்டியதால் இனிமேல் ஷங்கர் படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளார் ரஜினி
45.யாரையும் கவனிக்காதது மாதிரி தெரியும். ஆனால் தனக்கு பின்னால் யாரெல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் 360 டிகிரி சக்தி ரஜினிக்கு உண்டு என்று சொல்வார் அவருடன் தாய்வீடு, தனிக்காட்டு ராஜா படங்களில் நடித்த மறைந்த நடிகர் ராஜேஷ்.
46. கூலி சினிமா டிக்கெட் புக்கிங்கில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தனி முத்திரை பதித்திருக்கிறது.
47.ஹாலிவுட் படம் போல் கூலி படம் அமெரிக்காவில் 5 நாட்களுக்கு ஹவுஸ் ஃபுல் ஆகி இருப்பதால், அமெரிக்க மக்கள் அசந்து போயிருக்கிறார்கள்
48.அண்மையில் மதுரையில் ரஜினிக்கு கோயில் கட்டப்பட்டள்ளது. அதில் 300 கிலோ எடையுடன் ரஜினிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது

49.மதுரையில் உள்ள ரஜினி கோயிலில் ரஜினி -50 ஐ கொண்டாடும் வகையில், அந்தக் கோயிலில் ரஜினியின் 5500 புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளனர் ரசிகர்கள். ரஜினி சிலைக்கு பாலாபிஷேகவும் செய்துள்ளனர்
50.திரையுலகில் 50ஆவது ஆண்டை கொண்டாடும் ரஜினிக்கு இந்திய திரையுலக, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.