சூரரைப்போற்று படத்திற்கு மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. அந்த படத்திற்கு புறநானூறு என்று டைட்டில் வைத்தனர். புறநானூறு என்கிற டைட்டிலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படம் தொடங்க இருந்த நேரத்தில் சூர்யா மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் தொழிலில் வேறு முதலீடுகளை கொட்டினார். இந்த நேரத்தில்தான் அவருக்கு பொறி தட்டியது.
இந்தி எதிர்ப்பை மையமாக வைத்ததுதான் புறநானூறு படம். இந்த படத்தில் நடித்துவிட்டு எப்படி மும்பையில் வாழ முடியும் என்று யோசித்து, படத்தில் இந்திக்கு எதிரான வேகத்தை குறைக்கச் சொல்லி சூர்யா கேட்க, அதற்கு சுதா கொங்கரா மறுக்க, படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் சூர்யா.

சிவகார்த்திகேயனை வைத்து இயக்க சென்றாலும் பல முறை பல வழிகளில் கேட்டுப்பார்த்தும் புறநானூறு டைட்டிலை மட்டும் விட்டுத்தர மறுத்துவிட்டார் சூர்யா. வேறு வழியின்றி ‘பராசக்தி’ என்று டைட்டில் வைத்துவிட்டார் சுதா கொங்கரா.
அந்த புறநானூறு டைட்டிலை ஜித்து மாதவன் இயக்கும் சூர்யா-47 படத்திற்கு வைக்கப்போகிறாரா சூர்யா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. புறநானூறு படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்ட நஸ்ரியாவை சூர்யா-47 படத்தில் ஜோடியாக்கி இருப்பதால் இந்த கேள்வி எழுந்திருக்கிறது.
