
அரசியல் கள நிலவரம் முழுமையாகப் புரிந்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். ’ஜனநாயகன்’ படம்தான் திரையுலகில் தனது கடைசிப்படம் என்று சொன்னவர், இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியிருக்கிறார்.
ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்த சமயத்தில் திடீரென்று அரசியல் விஜயம் செய்துவிட்டார் விஜய்.
தவெக துவங்கி கட்சியின் பொறுப்பாளர்களை நியமித்து வரும் விஜய், கட்சி தொடர்பான முழு நேர அரசியலில் இன்னும் அவர் ஈடுபடவில்லை. குறிப்பாக கள அரசியலுக்கு இன்னும் அவர் வரவில்லை. தான் நடித்து வரும் ஜன நாயகன் படத்திற்கு பிறகு கள அரசியலுக்கு விஜய் வரப்போவதாக அவரது தவெக நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிடலாம் என்றுதான் முதலில் கணக்குப்போட்டுப் பார்த்தார் விஜய். இதற்காக ஆட்சியில் – அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் விளம்பரம் செய்து பார்த்தும் பலனில்லை. உடனே, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆனதுமாதிரி தானும் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரையிலும் உடன்பாடு எட்டவில்லை.
இந்த அதிருப்தியில் இருக்கும் விஜய்க்கு, கள ஆய்வு ஒன்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 25% வாக்குகள் தவெகவுக்கு உண்டு என்று பிரசாந்த் கிஷோர் கொளுத்திப்போட்டு போனது எல்லாம் பொய் என்று அந்த ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது. இதில் பெரிதும் அப்செட் ஆன விஜய், வந்திருக்கும் கள ஆய்வு முடிவுகள் மாதிரியே 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் தவெகவுக்கு சாதகமாக அமையாமல் போனால் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

மக்களுக்காக உழைக்க, உச்ச இடத்தை விட்டு, உயர்ந்த சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்ததாகச் சொன்ன விஜய், இப்போது திடீரென்று முடிவை மாற்றிக்கொள்ள தனியார் அமைப்பு மூலம் விஜய் எடுத்த சர்வே முடிவுகள்தான் காரணம் என்கிறது பனையூர் வட்டாரம். இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பின் கருத்துக்கணிப்பும் கூட தனக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்துகொண்டார் விஜய். உதயநிதி, அண்ணாமலைக்கு அடுத்த இடமே தனக்கு கிடைத்திருப்பது விஜயை அப்செட் ஆக்கியிருக்கிறது. இதனால் ஜனநாயகன் கடைசிப்படம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் விஜய்.
இந்த முடிவைக் கூட ரகசியமாக வைத்திருக்க தெரியாத தவெக தலைவர் விஜய், ஜனநாயகன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை மமிதா பைஜூவிடம் சொன்னது இப்போது வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது விஜய் ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு இருந்தார் என்று சொல்லும் மமிதா பைஜூ, ஜனநாயகன் தான் கடைசிப்படமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும் என்று தன்னிடம் விஜய் சொன்னதாகச் சொல்கிறார் மமிதா. ஜனநாயகன் படம்தான் கடைசிப்படமா? என்று தான் கேட்டதற்கு விஜய் அந்தப் பதிலை சொன்னதாகச் சொல்கிறார் மமிதா பைஜூ.
mqzqdqeoppnrqovpdfzunfrltlzfng