
Graphical Image
வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க தாலிபான் அரசு பிரதிநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், அபுதாபியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு தாலிபான் தூதர் பத்ருதீன் ஹக்கானிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.
ஹக்கானி தீவிரவாத இயக்க நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்களில் ஒருவரான பத்ருதீன் ஹக்கானி 2023 அக்டோபரில் ஐக்கிய அரபு நாட்டிற்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரது சகோதரர் சிராஜுதீன் ஹக்கானி தாலிபான்கள் தலைமையிலான ஆப்கனிஸ்தான் அரசில் உள்துறை அமைச்சராக உள்ளார்.
தாலிபான் அமைப்பின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான ஹக்கானி அமைப்பு 2008-ல் காபூலில் உள்ள இந்திய தூதரகம் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.