திருவள்ளூர் மாவட்டத்தில் 1703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களை ஆர்வம் காட்டச் செய்துள்ளது. இந்த லட்சியத் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான அறிவுசார் மையங்களில் ஒன்றாக திகழவுள்ளது.
இந்தத் திட்டத்தால், திருவள்ளூர் மாவட்டத்தின் முழு எதிர்காலமும் மாறும் எனவும் அதிக முதலீடுகள் செய்வதற்கான கவர்ச்சிகரமான இடமாக திருவள்ளுவர் மாற்றமடையும் என NewsVoir செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவுசார் நகரம் (TKC), திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைய இருக்கிறது. உலகளாவிய பல்கலைக்கழகங்கள், தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல அறிவுசார் மையங்களை அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான சமூக வாழ்வை ஊக்குவிக்க உள்ள இந்தத் திட்டம், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வழிவகுக்கவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நோடல் ஏஜென்சியாக உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO), தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் வகையில் ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தால், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பங்களிக்கும் வகையில் இருக்கும் என Newsvoir கூறியுள்ளது. தமிழ்நாடு அறிவுசார் நகரத்தால், ரியல் எஸ்டேட் சந்தையில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அறிவுசார் நகரைச் சுற்றி, பெரு நிறுவனங்களுக்கான அலுவலக இடங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் புதியத் திட்டங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by அசோக் முருகன்