தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கும் வரிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது புள்ளிவிவரங்களோடு அம்பலமாகியுள்ளது.
🔹கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி
🔹அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி – ரூ.3,41,817.60 கோடி
🔹கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை – ரூ.6,42,295.05 கோடி
🔹கடந்த 5 ஆண்டுகளில் உ.பி.க்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை – சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி
இதன்படி, மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை:
- தமிழ்நாடு – 26 பைசா
- கர்நாடகா – 16 பைசா
- தெலுங்கானா – 40 பைசா
- கேரளா – 62 பைசா
- மத்தியா பிரதேசம் – 1.70 ரூபாய்
- உத்தரப் பிரதேசம் – 2.2 ரூபாய்
- ராஜஸ்தான் – 1.14 ரூபாய்
மக்களவை திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு புள்ளி விவரங்களோடு பதில் அளித்துள்ளது.