இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் பாதுக்காப்பை வலியுறுத்தி சென்னையில் கடந்த 3ம் தேதி அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, தெலுங்கு சமூகம் குறித்து சில கருத்துக்களை முன்வைத்தார்.
இது சர்ச்சையான நிலையில், ‘’நான் தெலுங்கு மருமகள். அதனால் ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்தையும் இழிவுபடுத்தவில்லை. பிராமண சமூகத்தை வந்தேறிகள் என்று சொல்லும் சிலர விமர்சிக்கவே சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார்.
ஆனாலும் கஸ்தூரியின் விளக்கத்தை ஏற்காமல், அவருக்கு எதிராக தெலுங்கு மக்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். தங்களை இழிவுபடுத்திவிட்டதாக தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசும் 20 பெண்கள் இன்று கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
திமுக எம்பி ஆ.ராசாவும், ’’தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்” எனச் சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, “அப்படி சொல்லவில்லை” என வியாக்கியானம் பேசுகிறார். சினியாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஊடக வெளிச்சம் தன் மீது விழ, அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும் கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு.
தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ‘அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சிக்கரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? ’’ என்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சினை திரும்ப பெறுவதாகவும், பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.
’’ எனது கருத்து தெலுங்கு மக்களுக்கு பொதுவானது அல்ல. தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தை வழங்கியுள்ளனர். தெலுங்கு மக்களை புண்படுத்துவதோ எனது நோக்கமாக இருந்ததில்லை. ஆனாலும் எனது பேச்சு தெலுங்கு மக்களை பாதித்திருந்தால் எனது பேச்சுக்கு வருந்துகிறேன். 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய எனது உரையில், தெலுங்கு மக்கள் குறித்து பேசியதை நான் திரும்பப் பெறுகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.