சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
மாநாட்டில் சுமார் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால் 26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
“மாவட்டங்கள் வாரியான சில முக்கிய முதலீட்டு விவரங்கள்“
சென்னை:
- Qualcomm நிறுவனம் 177.27 கோடி ரூபாய் முதலீட்டில் தனது வடிவமைப்பு மையத்தை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 1600)
- ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் தனது தொழில்நுட்ப மையத்தை விரிவு படுத்துகிறது (வேலைவாய்ப்புகள்: 1500)
- Boeing India நிறுவனம் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 554)
- L & T நிறுவனம் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 40,000)
- அமெரிக்காவைச் சேர்ந்த யுபிஎஸ் நிறுவனம் 144 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் உள்ள தனது தொழில்நுட்ப மையத்தை விரிவு படுத்துகிறது (வேலை வாய்ப்புகள்: 1000)
- Sify Technologies நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் Data Center-ஐ அமைக்க உள்ளது (வேலைவாய்ப்புகள்: 300)
- Microsoft India நிறுவனம் 2740 கோடி ரூபாய் முதலீட்டில் தனது Data Center – ஐ அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 167)
- Adani Connex நிறுவனம் 13,200 கோடி ரூபாய் முதலீட்டில் Data Center -ஐ அமைக்க உள்ளது (வேலைவாய்ப்புகள்: 1000)
காஞ்சிபுரம்:
- அமெரிக்காவைச் சேர்ந்த First Solar நிறுவனம் மேலும் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது
- Salcomp எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2271 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 15,000)
- Royal Enfield நிறுவனம் புதிதாக 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 2000)
- Saint Gobain நிறுவனம் புதிதாக 3400 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 1140)
- Hyundai நிறுவனம் மின் வாகனங்கள், பேட்டரிகள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க 6180 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது
- Ashok Leyland நிறுவனம் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 500)
செங்கல்பட்டு:
- Godrej Consumer நிறுவனம் 515 கோடியில் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
Godrej Consumer நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர் பால்புதுமையினர்(LGBTQ+) மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தைவான் நாட்டைச் சேர்ந்த Pegatron எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது செங்கல்பட்டு ஆலையை விரிவுபடுத்துகிறது (வேலைவாய்ப்புகள்: 8000)
கிருஷ்ணகிரி:
- TATA எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை 12,082 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்த உள்ளது (வேலைவாய்ப்பு: 40,500)
- Festo India நிறுவனம் 520 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 2000)
தூத்துக்குடி:
- தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மின் வாகன நிறுவனம் VinFast , 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது
- தமிழ்நாட்டைச் சேர்ந்த Leap Green Energy நிறுவனம் 5442 கோடி ரூபாய் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது (வேலைவாய்ப்புகள்: 600)
- சிங்கப்பூரைச் சேர்ந்த SembCorp நிறுவனம் 36,238 கோடி ரூபாய் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 1511)
- தூத்துக்குடி & திருநெல்வேலி – JSW Renewable நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 6,600)
திருநெல்வேலி:
- Tata Power நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 800)
ராணிப்பேட்டை:
- தைவான் நாட்டைச் சேர்ந்த Hong Fu குழுமம், 1500 கோடி ரூபாய் முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது (வேலைவாய்ப்புகள்: 22,000)
திருவண்ணாமலை:
- Leap Green Energy நிறுவனம் 17,400 கோடி ரூபாய் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 3325)
- Adani Green Energy நிறுவனம் 24,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 4000)
விருதுநகர்:
- Ramco Cements நிறுவனம் புதிதாக 999 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது (வேலைவாய்ப்புகள்: 150)
திருச்சி:
- JAM (Jindal Defence) நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 800)
கோயம்புத்தூர்:
- ZF wind turbines நிறுவனம் 750 கோடி ரூபாய் முதலீட்டில் கோயம்புத்தூரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையை அமைக்கிறது (வேலை வாய்ப்புகள்: 225)
நாகப்பட்டினம்:
- CPCL நிறுவனம் 17 ஆயிரம் கோடி முதலீட்டில் ரசாயன ஆலையை அமைக்கிறது (வேலை வாய்ப்புகள் 2400)
ராமநாதபுரம்:
- Tata Chemicals நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் இரசாயன உற்பத்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 500)
பெரம்பலூர்:
- Zhong Bu நிறுவனம் 48 கோடி ரூபாய் முதலீட்டில் காலணி தொழிற்சாலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (வேலைவாய்ப்புகள்: 150)
பிற நிறுவனங்கள்:
- டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான AP Moller Maersk, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம்
- வியட்நாம் நாட்டைச் சேர்ந்த TKG Taekwang நிறுவனம் 1250 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலையை அமைக்கிறது (வேலைவாய்ப்புகள்: 9,000)
- Long Yin நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தனது காலணி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது (வேலைவாய்ப்புகள்: 10,000)
- Tata Power நிறுவனம் மாநிலம் முழுவதும் சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் (வேலைவாய்ப்புகள்: 3000)
- shell markets நிறுவனம் மாநிலம் முழுவதும் 1070 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலை வாய்ப்புகள்: 50,000)
- Mahindra Holidays & Resorts நிறுவனம் மாநிலம் முழுவதும் 800 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 2000)
- Kauvery மருத்துவ நிறுவனம் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது (வேலைவாய்ப்புகள்: 7500)
Published by அசோக் முருகன்