தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகளை அமைத்துருவாக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதன் அடிப்படையில், ஐந்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் முழு விவரங்கள் இதோ….
16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்:
கோயம்புத்தூர், கடலூர். திண்டுக்கல், ஈரோடு. கரூர், ஓசூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஆவடி, பெருநகர சென்னை மாநகராட்சி, கும்பகோணம், தஞ்சாவூர். தூத்துக்குடி மற்றும் சிவகாசி ஆகிய மாநகராட்சிகளின் எல்லைகளை கீழ்கண்டவாறு விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
கோயம்புத்தூர் மாநகராட்சி:
மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய 4 பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், சோமையம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய 9 ஊராட்சிகளும் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
கடலூர் மாநகராட்சி:
பெரியகங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலூர் ஓ.டி, கரையேரவிட்டகுப்பம், அரிசிபெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மற்றும் மருதாடு ஆகிய 13 கிராம ஊராட்சிகளையும் கடலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
திண்டுக்கல் மாநகராட்சி:
அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம். செட்டிநாயக்கன்பட்டி. குரும்பப்பட்டி, முள்ளிப்பாடி, பள்ளபட்டி, சீலப்பாடி மற்றும் தோட்டனூத்து ஆகிய 8 ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
ஈரோடு மாநகராட்சி:
கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய 4 கிராம ஊராட்சிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
கரூர் மாநகராட்சி:
ண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஏமூர் ஊராட்சி என இரண்டு ஊராட்சிகளும் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
ஓசூர் மாநகராட்சி:
எண் | ஊராட்சியின் பெயர் | இணைக்கப்படவுள்ள பகுதிகள் |
1. | பேகேபள்ளி | பேகேபள்ளி |
2. | நல்லூர் | நல்லூர் |
3. | ஒன்னல்வாடி | ஒன்னல்வாடி |
4. | கொத்தகொண்டபள்ளி | கொத்தகொண்டபள்ளி |
5. | பேரண்டப்பள்ளி | பேரண்டப்பள்ளி |
6. | சென்னசந்திரம் (பகுதி) | விஸ்வநாதபுரம் |
7. | தொரபள்ளி அக்ரஹாரம் (பகுதி) | i. குமுதேப்பள்ளி ii. காந்தி நகர் iii. எல்லம்மா கொத்தூர் |
ஆகிய 7 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
மதுரை மாநகராட்சி:
கருப்பாயூரணி, ஒத்தக்கடை நரசிங்கம், காதக்கிணறு, அரும்பனூர் (பகுதி), கொடிக்குளம் (பகுதி), செட்டிகுளம், கோவில்பாப்பாகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், விரகனூர், நாகமலைப்புதுக்கோட்டை கரடிபட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய 16 ஊராட்சிகள் மற்றும் பரவை பேரூராட்சி ஆகிய 17 உள்ளாட்சி அமைப்புகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
சேலம் மாநகராட்சி:
அமானிகொண்டலாம்பட்டி, செட்டிசாவடி, கொண்டப்பநாய்க்கன்பட்டி, எருமாபாளையம், சன்னியாசிகுண்டு ஆகிய 5 கிராம ஊராட்சிகள் சேலம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி:
மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாக்குறிச்சி, முத்தரசநல்லூர், அதவத்தூர், அல்லித்துரை. கே.கள்ளிக்குடி, குமாரவயலூர், நாச்சிக்குறிச்சி, புங்கனூர், சோமரசம்பேட்டை குண்டூர், கிழ குறிச்சி, கும்பக்குடி (பகுதி-3 வது வார்டு முதல் 6 வார்டு வரை) நவல்பட்டு, (பகுதி- 4வது வார்டு முதல் 15 வார்டு வரை), அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, கூத்தூர், மாதவபெருமாள்கோவில், பிச்சாண்டார்கோவில் ஆகிய 22 கிராம ஊராட்சிகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
திருப்பூர் மாநகராட்சி:
அவினாசி வட்டத்திற்குட்பட்ட கணியம்பூண்டி மற்றும் பொங்கலூர் வட்டத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் ஆகிய கிராம ஊராட்சிகள் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
ஆவடி மாநகராட்சி:
பூவிருந்தவல்லி, திருவேற்காடு. திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகளும், மற்றும் கருணாகரச்சேரி. நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர். அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி. பாணவேடு தோட்டம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சி:
திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
கும்பகோணம் மாநகராட்சி:
எண் | ஊராட்சியின் பெயர் | இணைக்கப்படவுள்ள பகுதிகள் |
1. | அண்ணலக்ரஹாரம் | 1. அண்ணலக்ரஹாரம் 2. மாத்தி 3. திருமெய்ஞானம் 4.அரியதிடல் 5. முகுந்தநல்லூர் |
2. | அசூர் (பகுதி) | 1. அசூர் 2.வேளாக்குடி |
3. | பாபுராஜபுரம் (பகுதி) | 1. புளியஞ்சேரி 2. கீழக்கொட்டையூர் 3. மேலக்கொட்டையூர் |
4. | ஏரகரம் (பகுதி) | 1. மூப்பக்கோவில் 2. மேலக்காவேரி |
5. | கொரநாட்டுக்கருப்பூர் (பகுதி) | 1.சத்திரம் கருப்பூர் 2. சந்தனாள்புரம் 3. கொரநாட்டுக்கருப்பூர் 4. சின்னகருப்பூர் |
6. | பழவாத்தான்கட்டளை | 1. அம்பேத்கர் நகர் 2. அம்மாதோட்டம் 3. பழவாத்தான்கட்டனை 4. முத்துப்பிள்ளை மண்டபம் 5. கோமளவல்லிபேட்டை 6. குப்பன்குளம் 7.பிளாஞ்சேரி |
7. | பண்டாரவாடை பெருமாண்டி | 1. பெருமாண்டி 2. ஆட்டோ நகர் 3. சின்னம்மாள் கல்லறை |
8. | சாக்கோட்டை | 1. சாக்கோட்டை 2. ஸ்ரீரங்கராஜபுரம் 3. திருக்கலசநல்லூர் 4. அறிவேலி 5. கருப்பூர் 6. பதினொருவேலி |
9. | உள்ளூர் | 1. உள்ளூர் 2. செக்காங்கன்னி 3. கொடியான்தோட்டம் |
10. | உமாமகேஸ்வரபுரம் (பகுதி) | 1. சாரங்கபாணி பேட்டை 2. மலையிருப்பு 3. மருதாடி 4.மேலப்பிள்ளையான்பேட்டை |
11. | வலையப்பேட்டை (பகுதி) | 1. அம்மாபேட்டை 2. வலையப்பேட்டை 3. மேலசத்திரம் |
12. | தேப்பெருமாநல்லூர் (பகுதி) | 1. ஐந்து தலைப்பு வாய்க்கால் 2. அம்மாச்சத்திரம் |
ஆகிய 12 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
தஞ்சாவூர் மாநகராட்சி:
எண் | ஊராட்சியின் பெயர் | இணைக்கப்படவுள்ள பகுதிகள் |
1. | இனாதுக்கான்பட்டி (பகுதி) | 1. துலுக்கம்பட்டி 2. கூத்தஞ்சேரி 3. இனாதுக்கான்பட்டி |
2. | கடகடப்பை (பகுதி) | கடகடப்பை |
3. | மணக்கரம்பை (பகுதி) | பள்ளியக்ரஹாரம் |
4. | மாரியம்மன்கோயில் | 1. ஆனந்தம் நகர் 2. எருக்கம்பள்ளம் 3. கௌதம்நகர் 4. ஞானம் நகர் 5. காட்டுத்தோட்டம் புதிய காலனி 6. பொன்னுசாமி மற்றும் அனிஷா நகர் 7. சுந்தரம் மற்றும் மீனாட்சி நகர் 8. மருங்கை 9. காடவராயன்குளம் 10. மீனாட்சி மற்றும் அருள் நகர் 11. மாரியம்மன்கோயில் 12. புன்னைநல்லூர் 13. புன்னைநல்லூர் ஆதிதிராவிடர் தெரு 14. மூப்பனார் தெரு |
5. | மேலவெளி | 1. ஆப்ரஹாம் பண்டிதர் நகர் 2. ஆற்றங்கரை தெரு வடகால் 3. களிமேடு 4. காமாட்சிபுரம் 5. ராஜேந்திரபுரம் 6. மரவணப்பட்டு 7. முத்து மீனாட்சி நகர் 8. ராகவேந்திராநகர் 9. வெங்கடேஸ்வரா நகர் 10. சிங்கபெருமாள் குளம் 11. சிங்கபெருமாள் கோவில் 12. சுந்தரபாண்டி நகர் 13. சங்கரன்பேட்டை 14. ஜெபமாலைபுரம் |
6. | நாஞ்சிக்கோட்டை (பகுதி) | 1. மாதாக்கோட்டை 2. கூத்தஞ்சேரி 3. அஜீஸ்நகர் இபி காலனி 4. அன்னை சத்யா நகர் 5. வங்கி ஊழியர் காலனி 6. காவேரி நகர் 7. சிலோன் காலனி 8. ஒசாகர் மற்றும் பாபு காலனி 9. இந்திராநகர் 10. கல்யாணசுந்தரம் நகர் 11. கருணாவதி நகர் 12. மறியல் 13. மேலவஸ்தாச்சாவடி 14. பிளோமினா நகர் 15. போஸ்டல் காலனி 16. ராஜாளியார் நகர் 17. ரெத்தினசாமி நகர் 18.ஆர்.எம்.எஸ். காலனி 19. செந்தமிழ் நகர் 20.டீச்சர்ஸ் காலனி 21. வைரம் நகர் 22.நாஞ்சிக்கோட்டை |
7. | நீலகிரி | 1. வாண்டையார் காலனி 2. கலைஞர் நகர் 3. திருவள்ளுவர் நகர் 4. திருவேங்கடம் நகர் 5. மானோஜிப்பட்டி 6. நீலகிரி |
8. | பிள்ளையார்பட்டி | 1. பிள்ளையார்பட்டி 2. வடக்கு ஆதிதிராவிடர் தெரு 3. எல்லம்மாள் காலனி 4. பூக்கொல்லை 5. மேலவஸ்தாச்சாவடி 6. பர்மாகாலனி 7. திருவள்ளுவர் நகர் |
9. | புதுப்பட்டிணம் | 1. கோரிக்குளம் புதுத்தெரு 2. கோரிக்குளம் 3. பாரதிதாசன் நகர் 4. தில்லை நகர் 5. ஜோதி நகர் 6. புதுப்பட்டினம் |
10. | இராமநாதபுரம் | 1. இராமநாதபுரம் 2. உப்பரிகை மானோஜிப்பட்டி |
11. | விளார் | 1. இந்திரா நகர் 2. இந்திரா நகர் நியூ 3. சண்முகநாதன் நகர் 4. கலைஞர் நகர் 5. நாவலர் நகர் 6. ரெங்கநாதபுரம் 7. கண்காணியார் தோட்டம் 8. விளார் மெயின் 9. ஆதிதிராவிடர் காலனி 10. வாய்க்கால் அம்பலக்காரத்தெரு 11. விளார் |
12. | ஆலங்குடி (பகுதி) | அருள்மொழிப்பேட்டை |
13. | புலவர்நத்தம் (பகுதி) | பவானியம்மாள்புரம் |
14. | கத்தரிநத்தம் (பகுதி) | தளவாய்பாளையம் |
ஆகிய 14 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
தூத்துக்குடி மாநகராட்சி:
சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய 7 ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
சிவகாசி மாநகராட்சி:
நாரணாபுரம், பள்ளபட்டி, அனுப்பன்குளம், ஆணையூர், சாமிநத்தம், தேவர்குளம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், செங்கமலநாச்சியார்புரம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது
41 நகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம்:
அரியலூர், பள்ளப்பட்டி, பள்ளிப்பாளையம், இராசிபுரம், குமாரபாளையம். கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை. பெரம்பலூர். இராமநாதபுரம், கீழகரை, பரமக்குடி. உடுமலைப்பேட்டை தாராபுரம், கொடைக்கானல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சிதம்பரம், பண்ருட்டி, தருமபுரி, பவானி, கோபிச்செட்டிப்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, சிவகங்கை, கோவில்பட்டி. முசிறி, இலால்குடி, துறையூர், திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, ஆரணி, திருவத்திபுரம். வந்தவாசி, மன்னார்குடி. திருவாரூர். விருதுநகர், அருப்புக்கோட்டை. இராஜபாளையம், தேனி-அல்லி நகரம், பெரியகுளம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 41 நகராட்சிகளின் எல்லைகளை கீழ்கண்டவாறு விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
13 புதிய நகராட்சிகள் உருவாக்கம்:
சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, கவுந்தப்பாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, அரூர், சூலூர், மோகனூர். நாரவாரிக்குப்பம் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய 13 புதிய நகராட்சிகளை கீழ்கண்டவாறு உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
25 கிராம ஊராட்சிகளை பேருராட்சிகளாக தரம் உயர்த்துதல்:
திருப்பூர், தூத்துக்குடி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், புதுக்கோட்டை, தரும்புரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
25 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம்:
திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், தருமபுரி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைத்து எல்லைகளை கீழ்கண்டவாறு விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது