தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்து வரும் சூழலில், புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டங்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது
பெங்களூரு-சென்னை விரைவு சாலை:
- ஸ்ரீபெரும்புதூர்
- மொளசூர்
- கோவிந்தவாடி
- பாணாவரம்
- மேல்பாடி
- வசந்தபுரம்
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை:
- கெங்கராம்பாளையம்(விழுப்புரம்)
- கொத்தட்டை(கடலூர்)
- ஆக்கூர் பண்டாரவாடை(மயிலாடுதுறை)
விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள்.
ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள்.
சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள்.
மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்.
என மொத்தம் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.