மாநில மகளிர் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்திடும் வகையில் மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளி மகளிருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்பில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கவும், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க மாநில மகளிர் கொள்கை வழிவகை செய்கிறது
19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு ‘கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.